Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வெள்ளி பாத்திரத்தில் உணவு உண்பதால் கிடைக்கும் நன்மைகள்!

வெள்ளி பாத்திரத்தில் உணவு உண்பதால் கிடைக்கும் நன்மைகள்!

By: Monisha Tue, 18 Aug 2020 5:05:27 PM

வெள்ளி பாத்திரத்தில் உணவு உண்பதால் கிடைக்கும் நன்மைகள்!

இன்று பல வித விதமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தாலும், வெள்ளி பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க சில மருத்துவ காரணங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் தெரிந்து கொண்டால், நிச்சயம் இதைத் தவிர்க்க மாட்டீர்கள். மற்ற உலோகங்களை ஒப்பிடும் போது வெள்ளி பாத்திரங்கள் சற்று விலை அதிகமானது என்பதில் சந்தேகத்திற்கு இடம் இல்லை. எனினும், நீங்கள் செலவு செய்யும் பணத்திற்கு உறுதியாக இந்த வெள்ளி பாத்திரங்கள் பலன் தரும் என்பது உண்மை.

நம் பெரியோர்களின் அறிவுரைப்படி, குழந்தைகளுக்கு வெள்ளி பாத்திரத்தில் உணவு தரும் போது அதிலுள்ள நுண்ணுயிர்கள் முற்றிலுமாக அகற்றப்படும். இதனால், நீங்கள் அதிக சிரமப்பட்டு பாத்திரத்தைச் சுத்தப்படுத்த தேவை இல்லை. சாதாரணமாகத் தண்ணீரில் கழுவினாலே, வெள்ளி பாத்திரம் சுத்தமாகி விடும். இதனால் குழந்தையின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகின்றது.

குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் வெள்ளிக் கிண்ணத்தில் உணவு அளிப்பதால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுகின்றது. சூடாக உணவை வைத்து தரும் போது, வெள்ளியின் எதிர்ப்பு பாக்டீரியல் பண்புகள் அதிகமாகி உணவில் கலக்கின்றது. இதனால் குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகின்றது.

silverware,food,health,immunity,jewelry ,வெள்ளி பாத்திரம்,உணவு,ஆரோக்கியம்,நோய் எதிர்ப்பு சக்தி,ஆபரணங்கள்

வெள்ளி பாத்திரங்களில் உணவைச் சூடாக வைக்கும் போது எந்த விதமான நச்சுத் தன்மையும், இரசாயன செயல்பாடும் நடக்காது. இது ஏன் என்றால், வெள்ளியைப் பல விதி முறைகளுக்குப் பின்னரே சுத்திகரிக்கப்பட்டு பின் தேவைப்படும் பாத்திரமாக வடிவமைக்கப்பட்டு பயன் பாட்டிற்குத் தருகின்றார்கள். இதனால், இதில் எந்த நச்சுத் தன்மையும் இருக்காது.

வெள்ளி பாத்திரத்தில் வைக்கப் படும் உணவு அதிக நேரத்திற்கு தன் தன்மையை இழக்காமல் புதிதாக இருக்கும். விரைவில் கெட்டுப் போகாது. இதனாலேயே பழங்காலங்களில், மக்கள் வெள்ளி குடங்களில் தண்ணீர் சேமித்து வைப்பார்கள். மேலும் உணவுப் பொருட்களை வெள்ளிப் பாத்திரங்களில் வைப்பார்கள். ஆக இந்த வெள்ளிப் பயன்பாடு நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே வழக்கத்திலிருந்துள்ளது.

வெள்ளியின் மற்றுமொரு முக்கியமான பண்பு என்னவென்றால், இதில் உணவை உண்ணும் போது உடல் சூட்டைச் சீராக வைத்துக் கொள்ள உதவும். இதனாலேயே, வெள்ளியை நகை/ஆபரணங்கள் செய்ய அதிகம் பயன்படுத்துகின்றனர்.

Tags :
|
|