Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஆன்லைன் வழி கல்வியால் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள்

ஆன்லைன் வழி கல்வியால் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள்

By: Karunakaran Wed, 21 Oct 2020 12:20:00 PM

ஆன்லைன் வழி கல்வியால் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள்

கொரோனாவால் பள்ளிகள் பூட்டபட்டதால், நான்கு மாதங்களுக்கும் மேலாக இந்தியா முழுவதும் ‘ஆன்லைன்’ வழி வகுப்புகள் நடக்கின்றன. இந்த ‘ஆன்லைன்’ வழி கல்வி குறித்து எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், ‘ஆன்லைன் வழியாக கற்றுக்கொடுப்பதில் தங்களுக்கு திருப்தியில்லை’ என்று, 75 சதவீத ஆசிரியர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். குழந்தைகளின் பெற்றோர்களோ, ‘ஆன் லைன் கல்விக்காக அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும் சவுகரியங்களை குழந்தைகள் வேறு விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்’ என்று குறைபட்டிருக்கிறார்கள்.

கருத்துக்கணிப்பில் இடம் பெற்ற மாணவர்களில் 74 சதவீதம் பேர் ‘ஆன்லைன் வழி பாடத்தைவிட பள்ளிகளில் நேரடியாக நடக்கும் வகுப்புகளே பயனுள்ளது’ என்று கூறியுள்ளனர். பெற்றோர்களில் 70 சதவீதம் பேரும் ‘பள்ளி நேரடி வகுப்புகளே சிறந்தது’ என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். இதன் மூலம், கல்வி போதிப்பதில் எத்தனை நவீன தொழில்நுட்பங்களை புகுத்தினாலும் நமது பாரம்பரியமான நேரடி வகுப்பு முறைகளே எல்லா காலத்திற்கும் சிறந்ததாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

children,online education,corona virus,school ,குழந்தைகள், ஆன்லைன் கல்வி, கொரோனா வைரஸ், பள்ளி

தனியார் அமைப்பு ஒன்று எடுத்திருக்கும் இந்த சர்வேபடி 55.7 சதவீத குழந்தைகள் முழுவகுப்புகளிலும் பங்கேற்கவில்லை என் பது தெரியவந்திருக்கிறது. 44.3 சதவீத குழந்தைகளே எல்லா வகுப்புகளிலும் இடம்பிடித்திருக்கிறார்கள். 26 சதவீத குழந்தைகள் ‘நெட்ஒர்க் சரிவர கிடைக்கவில்லை’ என்று கூறியிருக்கிறார்கள். 13 சதவீதம் பேர் ‘மின்சார தடை ஏற்பட்டது’ என்று காரணம் சொல்லியிருக்கிறார்கள். ‘வகுப்பு நடக்கும் நேரத்தில் தங்கள் கைக்கு போன் கிடைக்கவில்லை’ என்பது 12 சதவீத குழந்தைகளின் குறைபாடாக இருக்கிறது.

பள்ளிகளுக்கு செல்லும்போது குழந்தைகளிடம் முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கைமுறை இருந் தது. விழிப்பது, குளிப்பது, சாப்பிடுவது, பள்ளிக்கு கிளம்புவது போன்ற அனைத்தும் அந்தந்த நேரத்தில் நடந்தது. அதுவே வாழ்க்கைமுறையாக இருந்த நிலையில், ஆன்லைன் கல்வி முறையால் தூங்கும் நேரம், வகுப்பு நேரம் எல்லாம் மாறிவிட்டது. குழந்தைகளின் கண்களும் அதிக சோர்வடைகிறது. குழந்தைகளுக்கு மனஅழுத்தமும் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, ஆன்லைன் வகுப்புகளை தொடர்ச்சியாக நடத்தக்கூடாது. தேவையான ஓய்வளிக்கவேண்டும். அந்த ஓய்வு நேரத்தில் உடலுக்கு ஏதாவது பயிற்சியளிப்பது நல்லது. உணவருந்துவதற்கும், தூங்குவதற்கும் நேரத்தை முறைப்படுத்தவேண்டும்.

Tags :