Advertisement

பலவித ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கொண்டைக்கடலை!

By: Monisha Fri, 22 May 2020 1:14:04 PM

பலவித ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கொண்டைக்கடலை!

கொண்டைக்கடலையில் அதிக அளவு புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. முடி, நகம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு புரோட்டீன் சத்து மிக முக்கியம். எனவே தினமும் 100 கிராம் கொண்டைக் கடலையினை உட்கொண்டு வரவது நல்லது.

கொண்டைக் கடலையில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளது. உங்கள் உணவுகளில் உள்ள கால்சியம் சத்தினை உரிய மெக்னீசியம் சாது மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது. மேலும் உங்கள் எலும்பு மற்றும் பற்களின் வலிமையினை அதிகரிக்கின்றது. எனவே உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் தினமும் கொண்டைக் கடலையினை உட்கொண்டு வந்தால் நிறைய பயன் பெறலாம்.

health benefits,chickpeas,protein,fiber,potassium ,ஆரோக்கிய நன்மைகள்,கொண்டைக்கடலை,புரதச்சத்து,நார்ச்சத்து,பொட்டாசியம்

கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. 100 கிராம் கொண்டைக் கடலையில் கிட்டத்தட்ட 19 கிராம் நார்சத்து நிறைந்துள்ளது. உடல் எடையினை குறைக்க நார்சத்து முக்கியம். தினமும் நார்சத்து உணவினை உண்டு வருபவர்களுக்கு மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.

கொண்டைக்கடலையில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. உங்கள் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க பொட்டாசியம் சாது மிக மிக முக்கியம். உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் தினமும் கொண்டைக்கடலையை ஒரு கைப்பிடி உண்டு வந்தால் அவர்களின் இரத்த அழுத்தம் குறைந்து ஆரோக்கியம் மேம்படும்.

Tags :
|