Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஒருசில உடற்பயிற்சிகளை செய்ய கூடாது

குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஒருசில உடற்பயிற்சிகளை செய்ய கூடாது

By: Karunakaran Thu, 24 Dec 2020 08:44:26 AM

குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஒருசில உடற்பயிற்சிகளை செய்ய கூடாது

ஒருசில உடற்பயிற்சிகளை குறிப்பிட்ட வயதிற்கு மேல் செய்தால், அது கடுமையான காயங்களை உண்டாக்கிவிடும். எனவே ஒவ்வொருவரும் தங்களின் வயதிற்கு ஏற்ற உடற்பயிற்சிகள் என்னவென்று தெரிந்து செய்ய வேண்டும். க்ரஞ்சஸ் மற்றும் மற்ற ஆப் உடற்பயிற்சிகள், உடலுக்கு நல்ல வடிவமைப்பைத் தருவதோடு, தேவையற்ற கொழுப்புக்களைக் குறைக்கும். ஆனால் குறிப்பிட்ட வயதிற்கு மேல் இப்பயிற்சியை செய்வது என்பது பாதுகாப்பானது அல்ல. நடுத்தர வயதில் நுழைபவர்கள், ஆப் வகை உடற்பயிற்சிகளை செய்தால், அது முதுகெலும்புப் பிரச்சனைகளைத் தூண்டும்.

பெரும்பாலானோர் க்ரஞ்சஸ் செய்த பின் முதுகெலும்பு முறிவால் அவஸ்தைப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, இது கழுத்திற்கும் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். வேண்டுமானால், இந்த உடற்பயிற்சிக்கு பதிலாக ப்ளான்க்ஸ் செய்யலாம். கார்டியோ ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் தீவிரமான கார்டியோ பயிற்சிகள் நல்லதல்ல. அதுவுமம் 40 வயதிற்கு மேல், தசைகள் பலவீனமாக இருக்கும் மற்றும் தீவிரமான உடற்பயிற்சிகளை செய்தால், அது மிகுந்த சிரமத்தைத் தரும். உதாரணமாக, கார்டியோவில் முழங்கால்கள் மற்றும் ஜம்பிங் ஜாக்குகளை 40 வயதிற்கு மேல் செய்தால் தசைநார்களில் கிழிசலை ஏற்படுத்தும்.

exercises,old age,health,body ,பயிற்சிகள், முதுமை, உடல்நலம், உடல்

ஆகவே 40 வயதிற்கு மேல் குறைவான கார்டியோ பயிற்சிகளை அல்லது குறைந்த அளவு தீவிரமான கார்டியோ பயிற்சிகளை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. வயது அதிகரிக்கும் போது, லெக் எக்ஸ்டென்சன் முழங்காலில் தீவிரமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். கனமான பளுவைத் தூக்கும் போது, கணுக்கால் மற்றும் முழங்கால்கள் காயமடையக்கூடும். லெக் எக்ஸ்டென்சன் செய்யும் நடுத்தர வயது ஆண்கள் பலர் முழங்கால் மற்றும் கணுக்கால் வலி பற்றி புகார் கூறுகிறார்கள். எனவே எவ்வித ஆபத்தும் இல்லாமல் நன்மைகளைப் பெற நினைத்தால், டம்பெல் லன்ஜ்களை முயற்சி செய்யுங்கள்.

வயதிற்கு மேல் செய்யக்கூடாத உடற்பயிற்சிகளின் பட்டியலில் ஸ்குவாட்ஸ் இருப்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படலாம். ஏனெனில் ஜிம்மில் செய்யக்கூடிய பொதுவான உடற்பயிற்சிகளுள் ஒன்று தான் ஸ்குவாட்ஸ். இப்பயிற்சி மிகவும் எளிதானது மட்டுமின்றி, மிகுந்த நன்மையளிக்கக்கூடியதும் கூட. ஆனால் 40 வயதிற்கு மேல் ஸ்குவாட்ஸ் பயிற்சிகளை செய்தால், அது தசைகளில் சிரமத்தை ஏற்படுத்தி, காயங்களையும், கிழிசலையும் ஏற்படுத்தும்.

Tags :
|