Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • காப்பி டீ குடிக்க பேப்பர் கப் பயன்படுத்துகிறீர்களா? இதோ இருக்கு ஆபத்து!

காப்பி டீ குடிக்க பேப்பர் கப் பயன்படுத்துகிறீர்களா? இதோ இருக்கு ஆபத்து!

By: Monisha Sun, 20 Dec 2020 2:42:54 PM

காப்பி டீ குடிக்க பேப்பர் கப் பயன்படுத்துகிறீர்களா? இதோ இருக்கு ஆபத்து!

நம்மில் பலருக்கும் பேப்பர் கப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. நிறைய பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பொதுவாக காப்பி டீ குடிக்க பேப்பர் கப் தான் உபயோக படுத்துகிறோம். இது மிகவும் ஆப்பத்தானது. பேப்பர் கப்கள் குடிப்பதற்கு பாதுகாப்பானவை அல்ல. அவற்றில் மூன்று கப் டீ குடிப்பவர், சுமார் 75,000 நுண்ணிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார் என்று ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

காகிதக் கோப்பைகளில் பொதுவாக மெல்லிய அடுக்கு ஹைட்ரோபோபிக் பொருளால் பூசப்படுகின்றன. அவை பெரும்பாலும் பிளாஸ்டிக் மற்றும் சில சமயங்களில் கோ-பாலிமர்களால் ஆனது. கோப்பையில் சூடான தேநீரை அல்லது காப்பியை ஊற்றும் போது, மைக்ரோபிளாஸ்டிக் அடுக்கு கரைந்து, தேநீர் அல்லது காப்பியுடன் கலந்து நமது வயிற்றுக்குள் செல்கிறது.

coffee,tea,paper cups,plastic,health ,காப்பி,டீ,பேப்பர் கப்,பிளாஸ்டிக்,ஆரோக்கியம்

25,000 மைக்ரான் அளவிலான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் 100 மில்லி சூடான திரவத்தில் கலப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை உட்கொள்ளும்போது, ​​உடல்நல பாதிப்புகள் மிக தீவிரமாகும் என ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் இவை சுற்று சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

நமது முன்னோர்கள் சுற்று சூழலை பாதிக்காத வகையில் அதே சமயம் உடலை பாதிக்காத வகையில், வாழை இலை, இலைகளால் செய்யப்பட்ட தொன்னைகள், போன்றவற்றால் ஆன பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் வழியை கடைபிடித்து ஆரோக்கியமாக வாழ கற்றுக் கொள்வோம்.

Tags :
|
|