Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • முருங்கை இலைப்பொடி டீ வாழ்வை ஆரோக்கியமானதாக்கும்

முருங்கை இலைப்பொடி டீ வாழ்வை ஆரோக்கியமானதாக்கும்

By: Nagaraj Mon, 19 Oct 2020 9:16:53 PM

முருங்கை இலைப்பொடி டீ வாழ்வை ஆரோக்கியமானதாக்கும்

உடல் ஆரோக்கியமாகவும், வலுவானதாகவும் இருக்க முருங்கை இலைப் பொடி டீ சாப்பிட்டு பாருங்கள்.

தூங்கி எழுந்ததும், களைப்பாக இருக்கும்போது, மாலை நேரத்தில் என எல்லா நேரங்களிலும் நம்மைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் ஒரு விஷயம் என்றால் அது டீ தான்.

அதே டீ ஆரோக்கியமான ஒன்றான இருந்தால் இன்னும் எவ்வளவு நன்றாக இருக்கும். முருங்கை காய், கீரை, பூ எல்லாவற்றிலும் மிக அதிகளவிலான ஆன்டி- ஆக்சிடண்ட்டுகளும் இரும்புச்சத்தும் இருப்பது நமக்குத் தெரியும். ஆனால் முருங்கை கீரை சாப்பிட யோசிப்போம். கசக்கும் என்று அதை ஒதுக்கி வைத்திவிடுவோம்.

ஆனால், முருங்கை இலையை பொடி செய்து அதை டீயில் கலந்து குடிப்பதால் அதிலுள்ள கசப்புத் தன்மையும் குறையும். சுவையாகவும் இருக்கும். இன்னும் கூடுதல் நன்மைகளையும் பெற முடியும். உடலில் உள்ள கழிவுகளை எளிதாக வெளியேற்றவும் முடியும்.

body inflammation,blood pressure,benefit,drumstick tea ,உடல் வீக்கம், ரத்த அழுத்தம், அனுகூலம், முருங்கை டீ

முருங்கைக்கீரை அல்லது முருங்கைக்காய் தென்னிந்தியர்களின் பாராம்பரிய உணவு வகைகளில் ஒன்றாகப் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், உலகின் பல்வேறு நாடுகள் இப்போது தான் அதன் அருமையை உணர்ந்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் நம் ஊரில் கிடைக்கும் கீரைகளைச் சாப்பிடுவதே இல்லை.

குறிப்பாக, முருங்கை கீரை, அரைக்கீரை போன்ற நாட்டு கீரை வகைகளை ஏளனமாகப் பார்க்க ஆரம்பித்து விட்டோம். ஆனால், நாகரீகம் என்ற பெயரில் பீட்சா, பர்கரை நம்மிடம் திணித்து விட்டு, நம்முடைய பாரம்பரிய முருங்கை இலையை பொடி செய்து மொரிங்கா பவுடர் என்ற பெயரில் பல நூறு ரூபாய்களுக்கு பேக் செய்து நம்மிடமே விற்கிறார்கள். உலகளவில் ஆரோக்கியமான ஒன்றாக எல்லோராலும் தற்போது பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

முருங்கை இலையில் தயாரிக்கப்படும் டீயில் பல்வேறு அத்தியாவசிய விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்திருக்கின்றன. மேலும் உள்ளுறுப்புகளில் தேங்கியிருக்கும் கொழுப்புக்களைக் கரைக்கப் பயன்படுகிறது. ஆன்டி ஆக்ஸிடென்டுகள் செறிந்த இந்த டீயில் பாலிபினால்கள் அதிகமாக இருக்கின்றது. முருங்கை டீக்கு எடையை குறைக்கும் ஆற்றல் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த டீயை குடிக்கும் போது கொழுப்பு சேமிக்கப்படுவதற்கு பதிலாக ஆற்றல் உற்பத்தி நடக்கிறது. முருங்கை இலைகள் குறைந்த கொழுப்பு சத்தை கொண்டிருப்பதோடு ஊட்டச்சத்துக்கள் செறிந்தது. இதில் கலோரிகளின் அளவும் குறைவு.

முருங்கை இலைகளை நிழலில் உலர்த்தி, அரைத்த பொடியில் இருந்து முருங்கை டீ தயாரிக்கப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதில் உள்ள க்வெர்சிடின் ஒரு சிறப்பு அனுகூலமாகும். இந்த பொருள் தான் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் உதவுவதாக சொல்லப்படுகிறது. கூடுதலாக இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்டுகளின் காரணமாக உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்படும் உடல் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

Tags :