Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பல்வேறு சத்துக்கள் நிறைந்த உலர் ஆப்ரிகாட் பழங்கள்!!

பல்வேறு சத்துக்கள் நிறைந்த உலர் ஆப்ரிகாட் பழங்கள்!!

By: Monisha Fri, 07 Aug 2020 4:42:56 PM

பல்வேறு சத்துக்கள் நிறைந்த உலர் ஆப்ரிகாட் பழங்கள்!!

ஆப்ரிகாட் பழங்களில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களை எவ்வகையிலும் பாதிக்காமல், அதன் நீர்ச்சத்துக்களை மட்டும் ஆவியாக்கி உலர வைப்பதால் கிடைப்பது தான் உலர் ஆப்ரிகாட் பழங்கள். இப்பழங்களின் ஊட்டச்சத்துக்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாததினால், மேலும் பலவித நன்மைகளை உலர் ஆப்ரிகாட்களிலிருந்து நீங்கள் பெறலாம்.

இப்பழங்களில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற பல்வேறு சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. ஒரு கப் உலர் ஆப்ரிகாட்டில் சுமார் 158 மைக்ரோகிராம் அளவு வைட்டமின் ஏ சத்து உள்ளது. இந்த உலர் பழம் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடல்லாமல், பலவகையான நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தியையும் உடலுக்கு வழங்க வல்லவை.

apricot fruit,calcium,potassium,phosphorus,health ,ஆப்ரிகாட் பழம்,கால்சியம்,பொட்டாசியம்,பாஸ்பரஸ்,ஆரோக்கியம்

இரும்புச்சத்து நிறைந்த உலர் ஆப்ரிகாட்கள் இரத்த சோகைக்கு எதிராக போராடுவதற்கு உதவக்கூடியவையாகும். மேலும் இரும்புச்சத்தை உறிஞ்சக்கூடியதான செம்பும் இதில் நிறைந்துள்ளது. தினசரி உணவில் உலர்ந்த ஆப்ரிகாட்களை சேர்த்துக் கொள்வது, மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கினால் அவதிப்படும் பெண்களுக்கு நன்மை பயக்கக்கூடியதான இரத்த சிவப்பணு உற்பத்திக்கு மிகவும் நல்லது.

உலர் ஆப்ரிகாட் பழங்களில் பெக்டின் உள்ளது. மேலும் இதில் மிதமான மலமிளக்கியான செல்லுலோஸும் நிறைந்திருப்பதால், இது மலச்சிக்கலை குணப்படுத்தவல்லதாகும். மலச்சிக்கலின் போது செல்லுலோஸ் கரையாத நார்ச்சத்து போல் இயங்கும். அதே வேளையில் பெக்டின் பொருட்கள், உடலில் உள்ள நீரின் அளவை குறைய விடாமல் காக்கும்.

உலர் ஆப்ரிகாட்கள் காய்ச்சலை குறைக்க உதவும். ஆகவே சாறாகவோ அல்லது தேனுடன் சிறிது நீர் சேர்த்து திரவமாகவோ தயரித்துக் கொள்ளுங்கள். இத்திரவம் உங்களுக்கு தாக சக்தியையும் கொடுக்கும். உலர்ந்த ஆப்ரிகாட், நீண்ட காலமாக கர்ப்ப கால மூலிகை மருந்தாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. இது குழந்தையின்மை, இரத்தக்கசிவு, வலிப்பு போன்றவற்றை குணமாக்குவதற்கும் உபயோகிக்கப்படுகிறது.

Tags :