Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுங்கள்... ஆரோக்கியத்தை உயர்த்துங்கள்

தினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுங்கள்... ஆரோக்கியத்தை உயர்த்துங்கள்

By: Nagaraj Mon, 23 Nov 2020 10:58:34 PM

தினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுங்கள்... ஆரோக்கியத்தை உயர்த்துங்கள்

தினமும் சிறிதளவு பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டால் கொலஸ்ட்ரால் குறைவதோடு, உடல் எடை குறையவும் உதவும்.

பேரீச்சம்பழம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாக விரும்பி சாப்பிடும் பழம். பேரீச்சம்பழத்தின் ருசி காரணமாக அதை சாப்பிட அனைவரும் விரும்புகிறோம். அறிவியல்ரீதியாகவும் பேரீச்சம்பழத்தின் பயன்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

முற்காலத்தில் பேரீச்சம்பழத்தை பயன்படுத்தி ஒயின் தயாரிக்கப்பதில் எகிப்து பெயர் பெற்றிருந்தது. தற்போதைய ஈராக் தேச பகுதியில் இருந்தே பேரீச்சை மரம் மற்ற இடங்களுக்கு பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சுவைமிகுந்த பேரீச்சை உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மை செய்கிறது.

பேரீச்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. மிகுந்த குறைந்த அளவு கொழுப்பே அதில் உள்ளது. தினமும் சிறிதளவு பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டால் கொலஸ்ட்ரால் குறைவதோடு, உடல் எடை குறையுவும் உதவும்.

barley,energy,physical health,vitamins ,பேரீச்சை, ஆற்றல், உடல் ஆரோக்கியம், வைட்டமின்கள்

உடலில் அதிகம் புரதம் (புரோட்டீன்) சேர வேண்டுமானால் பேரீச்சம்பழம் சாப்பிடவேண்டும். பேரீச்சை நம் தசைகளை வலுவாக்குகிறது. உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சி செய்வோரை தினமும் சில பேரீச்சம்பழங்களை சாப்பிட பயிற்சியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். பலர் உடல் ஆரோக்கியத்திற்காக வைட்டமின் துணை உணவுகளை சாப்பிடுகிறோம்.

பேரீச்சையை தினமும் சாப்பிட்டால் வைட்டமின்கள் இயற்கையாகவே உடலில் சேரும். பி1, பி2, பி3, பி5, ஏ1 மற்றும் சி ஆகிய வைட்டமின்கள் பேரீச்சம்பழத்தில் உள்ளன. பேரீச்சம்பழத்தில் இயற்கை சர்க்கரையான குளூக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் ஆகியவை உள்ளன. ஆகவே, பேரீச்சை உடலுக்கு நல்ல ஆற்றலை தருகிறது.

Tags :
|
|