Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இயர்போனைக் காதில் மாட்டி பாடல்களைக் கேட்டுக்கொண்டே தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள்

இயர்போனைக் காதில் மாட்டி பாடல்களைக் கேட்டுக்கொண்டே தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள்

By: Karunakaran Tue, 29 Sept 2020 6:09:26 PM

இயர்போனைக் காதில் மாட்டி பாடல்களைக் கேட்டுக்கொண்டே தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள்

மொபைல் அதிக நேரம் பயன்படுத்தும் நாடுகளில் முதல் ஐந்து இடங்களில் இந்தியாவும் ஒன்று. நமது நாட்டில் மொபைல் பயன்படுத்தும் வழக்கம் அதிகமாகி விட்டது. தொடக்கத்தில் மற்றவர்களோடு பேசுவதற்கு என்று மட்டுமே பயன்பட்டிருந்த மொபைல், வீடியோ பார்க்க, இணையத்தளத்தில் ஏதேனும் தேட, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என மொபைலின் பயன்பாடுகள் அதிகரித்துக்கொண்டெ இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இயர்போன் மூலம் மொபைலில் பாடல்கள் கேட்பது.

நம்மில் பலருக்கு பாடல்கள் கேட்டுக்கொண்டே தூங்கும் பழக்கம் இருக்கலாம். ஏனெனில், வேறெந்த நினைவுகளும் வந்து தூக்கம் வரவிடாமல் செய்யால் இருக்க, அவர்களுக்கு மிகப் பிடித்த பாடல்களை டவுண்லேடு செய்து, இயர்போன் மூலம் கேட்டுக்கொண்டே தூங்குவார்கள். பாடல்கள் கேட்பதோ அதிலும் தூங்குவதற்கு முன் பாடல்கள் கேட்பதோ தவறான பழக்கம் அல்ல. ஆனால், இயர்போனைக் காதில் மாட்டிக்கொண்டு, பாடல்களைக் கேட்டுக்கொண்டே தூங்குவதுதான் சரியானது அல்ல.

night,sleep,listening,earphones ,இரவு, தூக்கம், கேட்பது, காதணிகள்

தூக்கம் வராமல் இருக்க பாடல்கள் கேட்பது என்பது மாறி, நல்ல பாடல்களைக் கேட்டுக்கொண்டே நீண்ட நேரம் விழித்துக்கொண்டே இருக்கக்கூடும். அதனால், காலையில் நீங்கள் நினைத்த நேரத்தில் விழித்து எழ முடியாமல் லேட்டாகலாம். சில இயர்போன்களில் காதில் செருகும் இயர்பட்ஸ் ரொம்பச் சின்னதாக இருக்கும். அதனால், தூங்கும்போது காதில் இருந்தால், கைப்பட்டு அல்லது தலையை சாய்த்து தூங்குகையில் அது உள்ளே போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

பெரிய பட்ஸ் உள்ள இயர்போனை மாட்டிக்கொண்டு புறண்டு படுக்கையில் காதில் அழுத்தி வலி போன்ற சில சிக்கல்கள் வரலாம். காதில் தண்ணீர் புகுந்து சாதரண வலியாக இருக்கலாம். அதோடு நீங்கள் இயர்போனில் பாட்டுக்கொண்டே தூங்கும்போது, வலி அதிகரிக்கலாம் அல்லது தலைவலியும் வரலாம். இயர்போனில் பாட்டுக்கேட்டுக்கொண்டே நன்கு தூங்கிவிடுகிறீர்கள். காலில் அல்லது கையில் ஏதோ தட்டுப்பட சட்டென்று பதற்றத்துடன் விழித்துக்கொள்கிறீர்கள். அந்த நேரத்தில் காதில் சத்தமாக பாட்டுக் கேட்டால் இன்னும் பதற்றம் அதிகமாகி விடும். நாம் குறிப்பிட்ட நேரம் மட்டும் பாடல்களைக் கேட்டுவிட்டு, பிறகு நிறுத்திவிட்டு உறங்குவதே சரியானது.

Tags :
|
|