Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பும், பின்பும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்

மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பும், பின்பும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்

By: Karunakaran Mon, 05 Oct 2020 3:32:23 PM

மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பும், பின்பும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்

கொரோனா பீதியால் நீரிழிவு, இதய நோய் சார்ந்த பிரச்சினைகள், புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. தற்போது நாள்பட்ட நோய்கள் மட்டுமின்றி பிற வியாதிகளுக்கும் சிகிச்சை பெறுவதற்கு பலரும் மருத்துவமனைக்கு செல்லத்தொடங்கி இருக்கிறார்கள். கொரோனா பற்றிய பயம் காரணமாக போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் கடைப்பிடிக்கிறார்கள்.

மருத்துவமனைக்கு சென்று முன்பு போல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இல்லாவிட்டாலும் சரியான திட்டமிடுதலுடன் செயல்பட வேண்டும். மருத்துவமனைக்குள் டாக்டரை சந்தித்து ஆலோசனையும், பரிசோதனையும் மேற்கொள்வதற்கு கால் மணி நேரம் முதல் அரை மணி நேரம் வரையே செலவிடுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாகவே தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘அப்பாயிண்ட்மெண்ட்’ வாங்கிவிடுவது நல்லது.

ethics,hospital,patients,corona virus ,நெறிமுறைகள், மருத்துவமனை, நோயாளிகள், கொரோனா வைரஸ்

மருத்துவமனைக்கு செல்வதற்கு முக கவசம் அணிவதோடு கையுறையும் அணிந்து கொள்வது பாதுகாப்பானது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் முக கவசத்தை உபயோகிப்பதும் நல்லது. கையுறைகளை அணிந்திருந்தாலும் மருத்துவமனையில் தேவையில்லாமல் எந்த இடத்தையும் தொடக்கூடாது. மருத்துவரை சந்தித்துவிட்டு இதர பரிசோதனைகளை மேற்கொண்டு வீடு திரும்பியதும் அணிந்திருக்கும் முக கவசத்தை குப்பையில் போட்டுவிட வேண்டும். கைகளை சோப்பு கொண்டோ சானிடைசர் கொண்டோ கழுவிவிட வேண்டும். அதுபோல் அணிந்திருக்கும் கையுறை கள், உடைகளை வெந்நீரில் முக்கிவைத்து துவைப்பதும் நல்லது.

செல்போன்கள், வாகனங்களின் சாவிகள், பணம் செலுத்திய கார்டுகள் என மருத்துவமனைக்கு சென்றபோது பயன்படுத்திய பொருட்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துவிடுவது நல்லது. பருவகால மாற்றத்தின்போது நோய்த்தொற்றுக்கு ஆளாவது இயல்பானது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய் பாதிப்புக்குள்ளானால் பீதியடையாதீர்கள். தயங்காமல் உடனே மருத்துவ ஆலோசனை பெற்றுவிடுவது நோயின் வீரியத்தை குறைக்க உதவும். எல்லா சமயங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

Tags :
|