Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது

நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது

By: Karunakaran Mon, 07 Dec 2020 11:11:07 AM

நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது

நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று. குறிப்பாக தினமும் 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். கழிவு மண்டலங்களின் இயக்கம், செரிமானம் ஆகியவற்றின் இயக்கங்களுக்கும் சுமார் 400-க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன.

வனப்பான உடல் பொலிவைப் பெறுவது என்பது, நாம் உடற்பயிற்சி ஆரம்பித்தபோது நமது ஆரோக்கியம், உடல் தகுதி முதலியவை எப்படி இருந்தது என்பதை பொறுத்து அமையும். சிலருக்கு சில வாரங்களோ வேறு சிலருக்கு சில மாதங்களோ கூட ஆகலாம்.

exercise,disease-free life,yoga,health ,உடற்பயிற்சி, நோய் இல்லாத வாழ்க்கை, யோகா, ஆரோக்கியம்

ஆனால் ஒன்று நிச்சயம். எவராக இருப்பினும், நாளை- நாளை மறுநாள் என்று தள்ளிப் போடாமல் உடற்பயிற்சியை மிதமாகவும், தவறாமலும், ஒழுங்காகவும் செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் கட்டுடலுடனும், முழு உடல் தகுதியுடனும், ஆரோக் கியமாக வாழலாம்.

நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும். இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வது போதாது. குறைந்தது 20 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால்தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

Tags :
|