Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கால் உடல் ஆரோக்கியம் உயரும்

நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கால் உடல் ஆரோக்கியம் உயரும்

By: Nagaraj Tue, 22 Sept 2020 2:36:27 PM

நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கால் உடல் ஆரோக்கியம் உயரும்

உடலுக்கு குளிர்ச்சித் தன்மை அளிக்கும், மலச் சிக்கலை போக்கக் கூடியதுமான பனங்கிழங்கின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

மார்கழி மாசம் தொடங்கி தை, மாசி வரை பனங்கிழங்கு சீசன் என்று சொல்வார்கள். அந்த மாதங்களில் பனங்கிழங்கு அதிகமாக நமக்கு கிடைக்கும். இதனைச் சாப்பிடுவதால் நமக்கு பலம் கூடுகிறது.

பனங்கிழங்கை சிறிது மஞ்சளுடன் சேர்த்து வேக வைத்து, பின்னர் கிழங்கை வெயிலில் காய வைத்து, அதை, மாவாக்கி, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைத்து, உடல் வலுவாகும்.

பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட பெண்களின் கர்ப்பப்பை வலுப்பெறும் மற்றும் உடல் உள் உறுப்புகள் நலம் பெறும். சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களும், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு உள்ளவர்களும் மாவை உணவில் சேர்த்துவர, நல்ல பலன்கள் தெரியும்.

cashews,health,fiber,immunity ,பனங்கிழங்கு, ஆரோக்கியம், நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி

பனங் கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலு கிடைப்பதுடன், ஆரோக்கியமும் மேலோங்கும். இந்த பனங்கிழங்கை அப்படியே சாப்பிடாமல் வித்தியாசமாக தோசை செய்து சாப்பிடலாம்.

வேக வைக்காத பனங்கிழங்கை வெயிலில் காயவைத்து, அரைத்து மாவாக்கி சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டும். தேவைக்கேற்ப இந்த மாவை கூழாக்கி சாப்பிடலாம். இந்த மாவை நீரில் கரைத்து, தேவைக்கு உப்பு சேர்த்து, கோதுமை தோசை ஊற்றுவது போல் ஊற்றி தோசையாக சாப்பிடலாம் அல்லது உப்புமா செய்தும் சாப்பிடலாம்.

நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக் கூடியது. ஆகையால், கிடைக்கும் போது பயன்படுத்துவோம், கிடைக்காத நாட்களுக்காக மாவாக சேமித்துக் கொள்வோம். ஆரோக்கியமாக இருப்போம்.

Tags :
|
|