Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

தொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By: Nagaraj Fri, 16 Oct 2020 3:21:22 PM

தொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

தொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சரியான முறையில் உணவு கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டால் தொப்பை காணாமல் போய்விடும்.

தொந்தி, தொப்பை என்பது அனைவருக்கும் இருக்கக் கூடிய ஒன்று தான். சரி தொப்பை வளர்வதற்கு சிலபல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக காரணங்களை தெரிந்துக் கொள்வோம்.

கொழுப்பு வகை உணவுகள், அதாவது உடலின் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும் வறுத்த உணவுகள், சீஸ் கேக், பர்கர், பட்டர் பாப்கான், சமோசா, இனிப்புகள் என பல பண்டங்களை தின்று தொப்பையை வளர்க்கிறோம். ஆரோக்கியமற்ற இந்த உணவுகளை குறைத்தால், தொப்பை போயே போச்சு என்று ஒரே நாளில் கரையா விட்டாலும், எறும்பு ஊற கல்லும் தேயும் என்ற முதுமொழிக்கு ஏற்ப நாம் முதுமையடைவதற்கு முன்னதாக போய்விடும்.

belly,control,exercise,body language,fast food ,தொப்பை, கட்டுப்பாடு, உடற்பயிற்சி, உடல்வாகு, பாஸ்ட் புட்

ஆரோக்கியமற்ற உணவுகளில் உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடையாது. இதுபோன்ற உணவுகளை தொடர்ந்து உண்டால், குண்டாவது நிச்சயம். Fast foods எனப்படும் துரித உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால், துரிதமாக தொப்பையும் வளர்ந்துவிடும். இது உடலின் நடுப்பகுதியான இடுப்பின் அளவை பெரிதாக்குகிறது.

தொப்பை இல்லாத இயல்பான உடலையாவது பெற வேண்டுமானால், பாஸ்ட் புட் உணவுகளை துரிதமாக ஒதுக்கிவிடவும். உடற்பயிற்சி என்றால் உடலின் உறுப்புகள் அனைத்திற்கும் புத்துணர்சிக் கொடுக்கும், உடலின் இயக்கத்தை உறுதிப்படுத்தும் பயிற்சிகளை செய்யவேண்டும். யோகா, ஜாகிங் போன்ற பயிற்சிகளை செய்வதால், உடலும் வலுப்படும், ஆரோக்கியமும் உறுதியாகும்.

தொப்பையில்லா, தட்டையான வயிற்றை பெறலாம். உடற்பயிற்சி செய்யும்போது, உடலில் உள்ள தசைகள் வலு பெறும், கொழுப்புகள் எரிபொருளாக செயல்பட்டு கரைந்துவிடும். உடற்பயிற்சி செய்யும்போது, தசைகளிலுள்ள கொழுப்புகள் மட்டுமே குறையும் என்பதால் கட்டுக்கோப்பான உடல்வாகைப் பெறலாம். கட்டுக்கோப்பான உடல் வேண்டுமானால், உடற்பயிற்சியும் வாய் கட்டுப்பாடும் அவசியம்.

Tags :
|