Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வைட்டமின் சி நிறைந்த ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய்..!

வைட்டமின் சி நிறைந்த ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய்..!

By: Monisha Sun, 29 Nov 2020 2:10:37 PM

வைட்டமின் சி நிறைந்த ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய்..!

வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்கனிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முக்கிய பழ வகைகளுள் ஒன்று. நெல்லிக்காய் வற்றல், நெல்லிக்காய் ஊறுகாய் போன்றவை நெல்லிக்காயிலிருந்து பெறப்படும் ஆரோக்கியம் தரும் உணவுப் பொருட்களாகும். நுரையீரல் சார்ந்த காசநோயை நெல்லிக்காய் விரைவாக குணப்படுத்துவது மருத்துவ ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நெல்லிக்காய் ஜூஸ் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து புரத கூட்டிணைப்பை மேம்படுத்துகிறது. இதனால் நமது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதற்கு அனுமதிப்பதில்லை. மேலும் இது நம் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு கொழுப்புகளை எரித்து பங்களிப்பதன் மூலம் ஆற்றல் நிலைகளை மேலே உயர்த்தகிறது.

vitamin a,health,gooseberry,protein,chromium ,வைட்டமின்,ஆரோக்கியம்,நெல்லிக்காய்,புரதம்,குரோமியம்

நெல்லிக்காய் ஜூஸ் ஒரு இயற்கையான இரத்த சுத்திகரிப்பானாகும். இது இரத்தத்திலிருந்து தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றி ஹீமோகுளோபினையும் இரத்தச் சிகப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்கிறது.

நெல்லிக்காயிலுள்ள குரோமியம் என்றழைக்கப்படும் மூலக்கூறு இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்களிக்கிறது. மேலும் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. நீரிழிவு நோயின் மீது நேர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கு இந்தச் சாற்றுடன் மஞ்சளையும் தேனையும் கலந்து பருக வேண்டும்.

Tags :
|