Advertisement

எண்ணில்லா நன்மைகள் கொண்ட பச்சை மிளகாய்!

By: Monisha Tue, 24 Nov 2020 1:32:14 PM

எண்ணில்லா நன்மைகள் கொண்ட பச்சை மிளகாய்!

சமையலில் அதிகம் பயன்படும் பச்சை மிளகாயில் பல ஆரோக்கிய நன்மைகளும் காணப்படுகிறது. பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, பி 6, சி, இரும்பு, தாமிரம், பொட்டாசியம், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும், பீட்டா கரோட்டின், கிரிப்டோக்சாண்டின், லுடீன்-சாந்தைன் போன்றவையும் உள்ளன. பச்சை மிளகாய் சாப்பிடுவதால் ஆரோக்கியம் மேம்படும். பச்சை மிளகாயில் போதுமான அளவு வைட்டமின் சி உள்ளது. வைட்டமின் சி, பிற வைட்டமின்கள் உடலில் சரியாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

பச்சை மிளகாயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டின் ஆரோக்கியத்திற்கு அனுகூலமானது. பச்சை மிளகாயில் உள்ள அபரிதமான உணவு இழைகள் செரிமான செயல்முறையை சீராக வைத்திருக்கும்.

green chillies,health,eyes,vitamins,protein ,பச்சை மிளகாய்,ஆரோக்கியம்,கண்கள்,வைட்டமின்,புரதம்

விட்டமின் ஏ நிறைந்த பச்சை மிளகாய் கண்களுக்கும் சருமத்திற்கும் அதிக நன்மை பயக்கும். கீல்வாதம் பாதித்தவர்களுக்கு பச்சை மிளகாய் மிகவும் நன்மை பயக்கும். மேலும், உடல் பாகங்களில் வலியைக் குறைக்கவும் இது உதவியாக இருக்கும்.

பச்சை மிளகாய் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும் உடலைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது. இதில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது.

பச்சை மிளகாயை சாப்பிடுவதால், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் குறைகிறது.

Tags :
|
|