Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடல் எடையை குறைக்க உதவும் கிரீன் டீ மற்றும் பிளாக் காபி!

உடல் எடையை குறைக்க உதவும் கிரீன் டீ மற்றும் பிளாக் காபி!

By: Monisha Fri, 18 Dec 2020 2:43:50 PM

உடல் எடையை குறைக்க உதவும் கிரீன் டீ மற்றும் பிளாக் காபி!

உடல் எடையை குறைக்க கிரீன் டீ மற்றும் பிளாக் காபி அருந்தலாம். இவை இரண்டும் பால் விட்டு குடிக்கும் தேநீர் மற்றும் காபிக்கு ஆரோக்கியமான மாற்றாகும். அவற்றில் குறைவான கலோரிகளும் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இந்த பதிவில் கிரீன் டீ மற்றும் பிளாக் காபி இரண்டில் எந்த பானம் அதிக பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிந்து கொள்வோம்.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் ஒருவருக்கு, இந்த இரண்டு பானங்களுமே பயனுள்ளதாக இருக்கும். ஆனால் முழு ஆரோக்கியம் என்று வரும்போது, பிளாக் காபியை விட கிரீன் டீ அதிக நன்மை பயக்கும். இது ஆண்டிஆக்ஸிடண்டுகளால் நிறைந்துள்ளது. பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆனால், இதை அதிகமாக உட்கொள்ளக்கூடாது.

இது தவிர, ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும், உடல் எடையை குறைக்க தவறாமல் உடற்பயிற்சி செய்வதும் அவசியமாகும். கிரீன் டீ அல்லது பிளாக் காபியை குடித்தால் மட்டும் நீங்கள் எடையை குறைத்து விட முடியாது. உடல் எடையை குறைக்க உங்கள் வாழ்க்கைமுறையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

weight,green tea,black coffee,health,exercise ,உடல் எடை,கிரீன் டீ,பிளாக் காபி,ஆரோக்கியம்,உடற்பயிற்சி

கிரீன் டீயில் காஃபின் மற்றும் கேடசின் எனப்படும் ஒரு வகை ஃபிளாவனாய்டு உள்ளது. கேடசின் உண்மையில் ஒரு வகை ஆன்டிஆக்ஸிடண்டு ஆகும். கிரீன் டீ பாதுகாப்பான பானமாகக் கருதப்படுகிறது. ஆனால் தினமும் 2 முதல் 3 கப்பைத் தாண்டக்கூடாது. ஒரு நாளில் காஃபின் அதிகமாக உட்கொள்வது தூக்க பிரச்சினைகளை ஏற்படுத்தும் மற்றும் இதய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

பெரும்பாலான மக்கள் விரும்பும் மற்றொரு பிரபலமான பானம் காபி. குறிப்பாக மக்கள் எடை குறைக்க முயற்சிக்கும்போது, க்ரீன் டீயைப் போலவே, பிளாக் காபியும் சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது விழிப்புணர்வை அதிகரிப்பதோடு டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

பிளாக் காபி பாரம்பரிய காபியின் ஆரோக்கியமான பதிப்பாகும். ஏனெனில் இது கிரீம் மற்றும் சர்க்கரை இல்லாதது. இது பொதுவாக உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களின் தேர்வாக இருக்கிறது. இதையும் அதிகப்படியாக உட்கொண்டால் அது சில எதிர்மறையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

Tags :
|
|