Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தாமதமாக தூங்கி தாமதமாக விழிக்கும் பழக்கம் கொண்டவர்களா? உங்களுக்கு இருக்கு ஆபத்து!

தாமதமாக தூங்கி தாமதமாக விழிக்கும் பழக்கம் கொண்டவர்களா? உங்களுக்கு இருக்கு ஆபத்து!

By: Monisha Sat, 19 Dec 2020 11:58:29 AM

தாமதமாக தூங்கி தாமதமாக விழிக்கும் பழக்கம் கொண்டவர்களா? உங்களுக்கு இருக்கு ஆபத்து!

நம்மில் பலர் மிகவும் நேரம் கழித்து தூங்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் பலர் நடு இரவில் தான் தூங்க செல்கின்றனர். இது பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும். இரவில் மிகத் தாமதமாக தூங்கி காலையிலும் தாமதமாக விழிக்கும் பழக்கம் உள்ளவர்களா? நீங்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாதிப்பு அதிகம்.

மிகத் தாமதமாக தூங்கி காலையில் தாமதமாக விழிக்கும் இளைஞர்களுக்கு, தூக்கத்தில் சுரக்கும் ஹர்மோன் ஆன மெலெடோனின் என்ற ஹார்மோன் சுரப்பது பாதிக்கப்படுவதால், பல விதங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. தூக்கத்தில் சுரக்கும் ஹார்மோன மெலட்டோனின் இரவு நேரத்தில்தான் சுரக்கின்றன. இதனை எந்த மருந்தின் மூலமும் சுரக்க வைக்க முடியாது.

health,sleep,students,youth,alert ,ஆரோக்கியம்,தூக்கம்,மாணவர்கள்,இளைஞர்கள்,எச்சரிக்கை

பதின்ம வயதில் உள்ளவர்கள் சரியான நேரத்தில் தூங்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தாமதமாக தூக்கி, தாமதமாக எழுபவர் என்றால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி பிரச்சினைகள் ஏற்படலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முறையற்ற தூக்க பழக்கத்தினால் பல பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே இன்றைய இளைஞர்கள் அனைவரும் தங்கள் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தூக்கப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

Tags :
|
|
|