Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வயிறு சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் ஏலக்காய்!

வயிறு சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் ஏலக்காய்!

By: Monisha Sat, 08 Aug 2020 5:48:04 PM

வயிறு சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் ஏலக்காய்!

மேற்கு தொடர்ச்சி மலைகளில் வளரும் ஒரு மூலிகை காய்தான் 'ஏலக்காய்'. பொதுவாக ஏலக்காயை அனைவரும் வாசனை பொருளாகத்தான் பார்க்கிறார்கள். அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். ஒரு சிலர் ஏலக்காயை விரும்பமாட்டார்கள். ஆனால் அதனின் மகத்துவத்தை புரிந்து கொண்டால் அதை விரும்பாமல் இருக்கமாட்டார்கள்.

வாகனங்களில் பயணிக்கும் ஒருசிலருக்கு வாந்தி, தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இந்த பிரச்சினைகள் பொதுவாக பள்ளிக்கூட மாணவ-மாணவிகள், ஏன் பெரியவர்களுக்கும் கூட இருக்கலாம். இவர்கள் தினமும் 2 ஏலக்காயை வாயில் போட்டு மென்று வந்தால் அதில் இருந்து விடுபடலாம். பல்வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தவும், வாயில் உள்ள கெட்ட கிருமிகளை போக்குவதிலும், பல் இடுக்குகளில் படிந்துள்ள கரைகளை போக்குவதிலும் ஏலக்காய் முக்கிய பங்குவகுக்கிறது.

cardamom,health,vomiting,common cold,cough ,ஏலக்காய்,ஆரோக்கியம்,வாந்தி,ஜலதோஷம்,இருமல்

ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மல்களால் அவதிப்படுபவர்கள் ஏலக்காய் கசாயம் தயாரித்து குடித்து வந்தால் அதில் இருந்து விரைவாக வெளிவரலாம். ஏலக்காயில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நோய்கள் வராமல் தடுக்கிறது.

மேலும் சிலருக்கு அஜீரண பிரச்சினை ஏற்படும். இவர்கள் ஏலக்காய், மிளகை நெய்யுடன் சேர்த்து வறுத்து, அதை பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் அஜீரண பிரச்சினையில் இருந்து விடுபடலாம். பசியின்மை பிரச்சினைதான் பெரும்பாலான நோய்க்கு காரணமாகிறது. இதை தடுக்க உணவில் ஏலக்காய் எடுத்துக்கொண்டாலே போதும்.

வாயு தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற அனைத்து பிரச்சினைகளும் நீங்க சிறிதளவு ஏலக்காய்களை சர்க்கரையுடன் சேர்த்து நன்கு பொடியாக்கி, தினமும் காலையில் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சார்ந்த அனைத்து பிரச்சினைகளும் தீரும்.

Tags :
|