Advertisement

மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கும் செர்ரி பழம்!

By: Monisha Tue, 08 Sept 2020 12:37:46 PM

மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கும் செர்ரி பழம்!

செர்ரி பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றை குறித்து நாம் இப்போது பார்க்கலாம். செர்ரி பழம் நமது ஞாபக சக்தியினை அதிகரிக்கும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.மேலும் இது மற்ற உணவுப் பொருட்களால் கிடைக்கும் வைட்டமின்கள், தாது உப்புகள் என அனைத்தையும் எளிதில் உணவு மண்டலத்தால் உட்கிரகிக்கச் செய்கின்றது.

தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான இளமையில் முதுமையான தோற்றம், வறண்ட தோல், தோல் சுருக்கம் என அனைத்துவகையான பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வாக அமைகின்றது. கண் பார்வைத் திறனை அதிகரிப்பதாகவும், இதனால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்களும் செர்ரி பழத்தினை எடுத்துக் கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

உடலில் நரம்பு கோளாறுகள் மற்றும் மன அழுத்தம் அதிகம் கொண்டவர்கள் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்படக்கூடும் மேற்கண்ட பாதிப்புகள் கொண்டவர்கள் செர்ரி அதிகம் சாப்பிட்டு வருவது நல்லது.

cherry fruit,memory,stress,eye sight,health ,செர்ரி பழம்,ஞாபக சக்தி,மன அழுத்தம்,கண் பார்வை,ஆரோக்கியம்

செர்ரி பழங்கள் உடலின் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. மன அழுத்தங்களையும் பெருமளவிற்கு குறைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க தினமும் செர்ரி பழங்களை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மிகும். உடல் எடை கூடியவர்கள் அதிக எடையை குறைக்க பல வகையான இயற்கை உணவுகளை சாப்பிடுவது அவசியம். செர்ரி பழம் உடல் எடை குறைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.

செர்ரி பழமானது அதிக நார்ச் சத்துகளைக் கொண்டதாக உள்ளது, இதனால் உடலின் கெட்ட கொழுப்பினைக் குறைத்து, உடல் எடையினை சீராகப் பராமரிக்க உதவுகின்றது. மேலும் செர்ரிப் பழம் மிகவும் சிறப்பான செரிமான சக்தியினைக் கொண்டுள்ளது.

Tags :
|
|