Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கொலஸ்ட்ரால் இல்லாத ப்ரோக்கோலினியின் ஆரோக்கிய நன்மைகள்!!

கொலஸ்ட்ரால் இல்லாத ப்ரோக்கோலினியின் ஆரோக்கிய நன்மைகள்!!

By: Monisha Tue, 27 Oct 2020 10:18:26 AM

கொலஸ்ட்ரால் இல்லாத ப்ரோக்கோலினியின் ஆரோக்கிய நன்மைகள்!!

அப்பல்லோ ப்ரோக்கோலி ஏ.கே.ஏ ப்ரோக்கோலினி என்பது ப்ரோக்கோலியை போன்ற ஒருவகை காய்கறியாகும். அப்பல்லோ ப்ரோக்கோலிக்கும் சாதாரண ப்ரோக்கோலிக்கு சிறிய மாற்றங்களே உள்ளன. ப்ரோக்கோலியைப் போலவே, அப்பல்லோ ப்ரோக்கோலியின் அனைத்து பாகங்களையும் முழுமையாக பயன்படுத்தலாம்.

வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் வளமான ஆதாரமாக இருக்கும் ப்ரோக்கோலிக்கும் சீன ப்ரோக்கோலிக்கும் கிராஸாக இருப்பது தான் ப்ரோக்கோலினி. இது கொலஸ்ட்ரால் இல்லாதது. இது இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் முதுமை தோற்றத்தை தடுக்கும் தன்மை கொண்டது.

ப்ரோக்கோலினியில் சல்போராபேன் என்ற வேதிப்பொருள் உள்ளது, இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் தோல் நோய்களை போக்கி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

cholesterol,broccoli,health,vitamins,nutrients ,கொலஸ்ட்ரால்,ப்ரோக்கோலினி,ஆரோக்கியம்,வைட்டமின்,சத்துக்கள்

ப்ரோக்கோலினியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கலைத் தடுக்கிறது, பசியைக் கட்டுப்படுத்துகிறது.

இதில் அதிக அளவு பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளது. அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும் ஆரோக்கியமான நரம்பு மண்டலம் மற்றும் மூளை செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது. அத்துடன் தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

ப்ரோக்கோலினி இந்தோல் 3 கார்பினோல் என்ற நொதியால் நிறைந்துள்ளது. இது கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வை பராமரிக்கிறது.

Tags :
|