Advertisement

இந்த காய்யில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா??

By: Monisha Sat, 28 Nov 2020 12:33:31 PM

இந்த காய்யில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா??

எல்லா காலங்களிலும் கிடைக்க கூடிய பழம் பப்பாளி. இந்த பதிவில் ஏராளமான நன்மைகளை தரும் பப்பாளிக்காய் பற்றி தெரிந்து கொள்வோம். மாதவிலக்கு சரியான நேரத்துக்கு வரவேண்டுமென்றால் மாத்திரைகளை சாப்பிட வேண்டியதில்லை. பப்பாளிக்காயை சமைத்து இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு வரும். பப்பாளிக்காயை அரைத்து சாறாக்கியும் குடிக்கலாம். ஒரு தேக்கரண்டிக்கு மேல் குடிக்க கூடாது.

வாய்ப்புண்ணுக்கு இயற்கை வைத்தியம் பப்பாளிக்காயிலிருந்து வெளிவரும் பால் தான். வாய்ப்புண் பிரச்சனையால் தவித்துவருபவர்கள் பப்பாளிக்காயை நறுக்கினால் வெளிவரும் பாலை புண்ணின் மீது தடவினால் புண்ணை விரைவில் ஆற்றும்.

papaya,health,mouth ulcers,menopause,obesity ,பப்பாளிக்காய்,ஆரோக்கியம்,வாய்ப்புண்,மாதவிலக்கு,உடல் பருமன்

உடல் பருமன் குறைய விரும்புபவர்கள் எந்தவிதமான பயிற்சியும் உணவுகட்டுப்பாடும் இல்லாமல் குறைய விரும்பினால் அவர்களுக்கு பப்பாளி காய் உதவும்.

உடல் எடை எப்போதும் அதிகரிக்காமல் இருக்க விரும்புபவர்களும் வாரம் ஒரு முறை பப்பாளிக்காயை கூட்டு அல்லது குழம்பில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எடை கட்டுக்குள் இருக்கும். அதிக எடையை கொண்டிருப்பவர்கள் உடல் எடை குறைவதை பார்க்கமுடியும்

பப்பாளிகாயை குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் கொடுக்க கூடாது. கர்ப்பிணிகள் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|