Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • அனைத்து வகையான வைட்டமின்கள் நிறைந்த பீர்க்கங்காய்!

அனைத்து வகையான வைட்டமின்கள் நிறைந்த பீர்க்கங்காய்!

By: Monisha Wed, 21 Oct 2020 11:51:44 AM

அனைத்து வகையான வைட்டமின்கள் நிறைந்த பீர்க்கங்காய்!

முற்றிய பீர்க்கங்காய் உடலுக்கு மிகவும் சிறந்தது. பீர்க்கங்காயில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் உள்ளன.

மேலும் கார்போஹைட்ரேட்டுகள், கரோட்டீன், கொழுப்பு, புரதம், ஃபைட்டின், அமினோ அமிலம், அலனைன், ஆர்ஜினைன், கனிகளில் லினோலிக் அமிலம், ஒலியிக், பால்மிட்டிக், ஸிடியரிக் அமிலம் போன்றவை காணப்படுகின்றன.

பீர்க்கங்காய் கஷாயம் மாதவிடாய் மற்றும் சிறுநீர்க் கோளாறுகளுக்கு பயன்படுகிறது. வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதைத் தடுத்து, வயிற்றில் புண்கள் வராமல் தடுக்கும். மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

silk squash,vitamin,health,immunity,protein ,பீர்க்கங்காய்,வைட்டமின்,ஆரோக்கியம்,நோய் எதிர்ப்புச் சக்தி,புரதம்

பீர்க்கங்காயின் இலைகளைச் சாறாக்கி லேசாக சூடுபடுத்தி ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும். பாகற்காய்க்கு பதிலாக இதைச் உணவில் எடுத்துக் கொள்ளலாம். இதன் இலைகளை அரைத்துப் புண் மற்றும் சொறி, சிரங்கு இருக்கும் இடங்களில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

இரத்த சோகை, தோல் நோயாளிகள் இதன் வேரைத் தண்ணீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை வடி கட்டி அருந்தி வர இரத்த விருத்தி உண்டாகும். பீர்க்கங்காய் நோய்க்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. ஆகவே இதனை சாப்பிட்டு வந்தால் கண்பார்யடையும், நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.

தோல் நோயாளிகள் பீர்க்கங்காய் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்களில் இருந்து விடுபடலாம். பீர்க்கங்காய் பசியுணர்வை கட்டுப்படுத்தி எடையை குறைக்க உதவுகிறது.

Tags :
|