Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடல் வளர்ச்சிக்கு உதவும் அனைத்து வகை சத்துக்கள் நிறைந்த சிறுகீரை!

உடல் வளர்ச்சிக்கு உதவும் அனைத்து வகை சத்துக்கள் நிறைந்த சிறுகீரை!

By: Monisha Thu, 17 Sept 2020 11:49:48 AM

உடல் வளர்ச்சிக்கு உதவும் அனைத்து வகை சத்துக்கள் நிறைந்த சிறுகீரை!

தோட்டங்கள் மற்றும் வீடுகளில் பயிர் செய்யப்படும் ஒரு வகை கீரை வகையை சேர்ந்தது சிறுகீரை. இதில் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. சிறுகீரையில் வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் உடலின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

நார்ச்சத்து நிறைந்த கீரை வகையில் ஒன்று சிறுகீரை. இந்த கீரை சாப்பிடுபவர்களுக்கு சாப்பிட கூடிய உணவுகள் நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது. மேலும் மூல வியாதி, மலச்சிக்கல் பிரச்சனைகளையும் எளிதில் குணமாக்கும் சக்தி கொண்டது சிறுகீரை .

கண்கள் நலமாக இருந்தால் தான் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய முடியும். சிறுகீரையில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்திருக்கிறது. இது கண்களில் உள்ள விழிகள், கருவிழி ஆகியவற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது.

vitamins,spinach,eyes,headaches,infertility ,வைட்டமின்,சிறுகீரை,கண்கள்,தலைவலி,மலட்டுத் தன்மை

வாரத்தில் ஒரு முறை சிறுகீரையை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்த இது உதவுகிறது. மேலும் சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது.

சிறுகீரையை வாரம் ஒரு முறை சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இரும்புச் சத்து உடலில் அதிகரிக்கும். மேலும் காச நோய், ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது. தலைவலி குணமாக சிறுகீரையுடன் இஞ்சி, பூண்டு, பெருங்காயம், மஞ்சள் கலந்து சூப் செய்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பல ஆண்களுக்கு உள்ள விந்தணுக்கள் குறைபாட்டினால் மலட்டுத் தன்மை ஏற்படுகின்ற வாய்ப்புகள் உள்ளன. ஆனால் சிறுகீரையை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத் தன்மை பிரச்சனை நீங்கும்.

Tags :
|