Advertisement

கபசுரக் குடிநீரை எவ்வாறு பருக வேண்டும்?

By: Monisha Fri, 23 Oct 2020 1:39:43 PM

கபசுரக் குடிநீரை எவ்வாறு பருக வேண்டும்?

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொடிய வைரஸ்கள் உடலை ஆட்கொள்ள முடியாமல் தடுக்க முடியும். காயகற்பம் மூலிகைகளை கொண்டு உருவாக்கப்படும் கபசுரக் குடிநீரை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கபசுரக் குடிநீர் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்தாக கருதப்படும் கபசுரக் குடிநீர் சளி, காய்ச்சல், களைப்பு, உடல் வலி ஆகியவற்றை போக்கும் திறன் கொண்டது.

நாட்டு மருந்து கடைகளில்: 1. ஆடாதொடை இலை, 2. சிறு தேக்கு, 3. கரிசலாங்கண்ணி, 4. சுக்கு, 5. திப்பிலி, 6. சிறுகாஞ்சேரி வேர், 7. அக்ரகாரம், 8. முள்ளி வேர், 9. கற்பூர வள்ளி இலை, 10. கோஷ்டம், 11. சீந்தில் தண்டு, 12. நிலவேம்பு சமூலம், 13. வட்ட திருப்பி வேர், 14. கோரைக்கிழங்கு, 15. கடுக்காய் தோல் ஆகிய மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் கொண்டு இந்த கபசுரக் குடிநீர் தயாரிக்கப்படுகிறது.

kapasura water,colds,flu,immunity,herb ,கபசுரக் குடிநீர்,சளி, காய்ச்சல்,நோய் எதிர்ப்பு சக்தி,மூலிகை

நாட்டு மருந்து கடைகளில் இது பொடியாகவும் கிடைக்கும். இதை கொதிக்கவைத்து சுண்டிய பிறகு வடிகட்டிக் குடிக்கலாம்.

குழந்தைகளுக்கு 15 மில்லி லிட்டர் கஷாயத்தில் தேன் கலந்து ஒரு ஸ்பூன் தினமும் கொடுத்து வந்தால் காய்ச்சல் குணமாகும். பெரியவர்கள் ஒருவேளைக்கு 30 மில்லி குடிக்கலாம். கர்ப்பிணிகள் கபசுரக் குடிநீரைத் தவிர்ப்பது நல்லது.

சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். மேலே குறிப்பிட்டுள்ள 15-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது. இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் சளி, இருமல், சிரமமின்றி மூச்சுவிடுதல் ஆகிய நோய்களை குணப்படுத்தும்.

Tags :
|
|