Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஆன்லைன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து குழந்தைகளுக்கு விளக்கி புரியவைப்பது எப்படி ?

ஆன்லைன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து குழந்தைகளுக்கு விளக்கி புரியவைப்பது எப்படி ?

By: Karunakaran Tue, 03 Nov 2020 2:04:20 PM

ஆன்லைன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து குழந்தைகளுக்கு விளக்கி புரியவைப்பது எப்படி ?

ஆன்லைன் வழியே பாடம் படிக்க தொடங்கியதில் இருந்து குழந்தைகளுக்கும், இணையதளத்திற்கும் இடையேயான நெருக்கம் வெகுவாக அதிகரித்து இருக்கிறது. இணையதளம் வழியே நடைபெறும் முறைகேடுகள் குறித்தும், ஆன்லைன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பெற்றோர் குழந்தைகளுக்கு விளக்கி புரியவைப்பது அவசியமானது. பல்வேறு ஆன்லைன் தளங்கள் குழந்தைகளை எளிதாக ஈர்த்துவிடுகின்றன. அதன் பின்னணியில் குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் அம்சங்களும் இருக்கின்றன.

ஆன்லைனில் நல்ல விஷயங்களை பார்க்க அனுமதிப்பதுபோல தீய விஷயங்கள் குறித்தும் குழந்தைகளுக்கு விளக்கி புரியவைக்க வேண்டும். எந்தெந்த ரூபத்தில் தீய விஷயங்கள் வெளிப்படும் என்பதையும், அதனை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதையும் பக்குவமாக புரியவைக்க வேண்டும். பெரும்பாலான சிறுவர்-சிறுமியர்கள் தங்கள் நண்பர்களுடன் சமூக ஊடகங்களில் அரட்டை அடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கு பெற்றோர் இடம் கொடுக்கக்கூடாது. ஆரம்பத்தில் நடக்கும் விவாதமும், இணையதள தேடல்களும் நாளடைவில் தவறான பாதைக்கு அழைத்து செல்ல வாய்ப்பிருக்கிறது.

online class,parents,online security,mobile ,ஆன்லைன் வகுப்பு, பெற்றோர், ஆன்லைன் பாதுகாப்பு, மொபைல்

மற்றவர்களுடன் முரண்பாடான பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள இணையதளத்தை உபயோகிக்கக்கூடாது என்பதில் பிள்ளைகள் உறுதியாக இருக்க வேண்டும். குழந்தைகள் தங்களுடைய பாஸ்வேர்டை சமூக ஊடகங்களிலோ, நண்பர்களுடனோ பகிர்ந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது. மற்றவர்களுக்கு நம்முடைய பாஸ்வேர்டு தெரிந்துவிட்டால் என்னென்ன பிரச்சினைகளெல்லாம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதை விளக்கி கூற வேண்டும். சமூக வலைத்தளங்கள் வழியே முன்பின் தெரியாத நபர்களுடன் பழகுவதற்கும் அனுமதிக்கக்கூடாது. குழந்தைகள் தங்களின் புகைப்படங்கள், தனிப்பட்ட அபிலாஷைகள், வசிப்பிடம் பற்றிய தகவல்களை பகிர்வதற்கும் அனுமதிக்கக்கூடாது.

குழந்தைகள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்கும் கடமையும் பெற்றோருக்கு இருக்கிறது. இணையதள சைபர் மிரட்டல் பற்றியும் பிள்ளைக்கு தெரியப்படுத்துங்கள். இது 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்றாகும். இணையதளம் எந்த அளவுக்கு நல்ல விஷயங் களை தெரிந்து கொள்வதற்கு வழிகாட்டுகிறதோ அதற்கு இணையான தீய பக்கங்களையும் கொண்டிருக்கிறது. எது சரி எது தவறு என்பதை தீர்மானிக்கும் பக்குவம் கொண்டவர்களாக பிள்ளைகளை வளர்த்தெடுங்கள்.


Tags :