Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வயிற்றில் வளரும் குழந்தை ஆணா என்பதை அறிவது எப்படி ?

வயிற்றில் வளரும் குழந்தை ஆணா என்பதை அறிவது எப்படி ?

By: Karunakaran Sat, 05 Sept 2020 6:44:43 PM

வயிற்றில் வளரும் குழந்தை ஆணா என்பதை அறிவது எப்படி ?

நாகரீகம் மாறிவிட்ட நிலையில், நாம் உண்ணும் உணவில் பலவிதமான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதனால் ஆண்மை குறைவு போன்றவை ஏற்படுகின்றன. இதனால் பல குடும்பங்கள் குழந்தை இல்லாத நிலை ஏற்படுகிறது. எனவே பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும் சரி மகிழ்ச்சியுடன் அதை ஏற்று கொள்வதே நல்லது. இருப்பினும் சிலர் தங்களுக்கு ஆண் குழந்தை தான் வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

மனைவி அல்லது குடும்பத்தில் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமுடன் இருப்பார்கள். இதுகுறித்து வெளி நாடு நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களின் உடல் நிலையை ஆராய்ச்சி செய்து, ஆண் குழந்தை பிறப்பதற்கான 10 முக்கிய அறிகுறிகளை வெளியிட்டுள்ளது.

baby,womb,male,pregnant ,குழந்தை, கரு, ஆண், கர்ப்பிணி

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அவரது சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அவருக்கு ஆண் குழந்தை பிறக்கும். கர்ப்பமாக இருக்கும் பொதுவலது மார்பகம் இடது மார்பகத்தை விட பெரிதாக உள்ளதெனில் நீங்கள் ஆண் குழந்தையை பெற்றெடுக்க போகிறீர்கள். கால் பாதங்கள் அதிக விறைப்புடனும், அதிக குளிர்ச்சியுடனும் இருந்தால் ஆண் குழந்தை பிறப்பது உறுதி. கர்ப்பமாக இருக்கும் பெண் இடது பக்கம் தூங்க விரும்பினால், அந்த பெண்ணனிற்கு ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு இருக்கும்.

கருவுற்றிருக்கும் போது கூந்தலின் வளர்ச்சி அதிகப்படியாக மற்றும் வேகமாகவும் இருந்தால் அந்த பெண், ஆண் குழந்தையை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உடல் எடை சரிசமமாக உடலின் எல்லா பகுதிகளிலும் பரவியிருந்தால் பெண் குழந்தையை கருவில் சுமப்பதாக அர்த்தம். இதுவே உங்களின் வயிற்று பகுதில் மட்டும் அதிகப் படியான சதை இருந்தால் நீங்கள் ஆண் குழந்தையை கருவில் சுமப்பதாக அர்த்தம்.

Tags :
|
|
|