Advertisement

நமது கனவு இல்லத்தை பராமரிப்பது எப்படி ?

By: Karunakaran Tue, 03 Nov 2020 2:04:03 PM

நமது கனவு இல்லத்தை பராமரிப்பது எப்படி ?

வீடு பராமரிப்பு ஒரு கலையாகவே கருதப்படுகிறது. வீட்டை பராமரிப்பதற்கு அதனை தூய்மையாக வைத்திருப்பதே முதன்மையான விஷயமாக இருக்க முடியும். பொதுவாக வீட்டில் உள்ள அறைகளை அடிக்கடி பெருக்கி வந்தாலே குப்பைகள் சேருவது குறைந்து சுத்தமாக காட்சி அளிக்க தொடங்கிவிடும். அதேபோல் வாரம் ஒரு முறையாவது வீட்டை கழுவி வருவதும் சிறப்பானதாக அமையும். சில பெண்கள் வெள்ளிக்கிழமை உள்ளிட்ட விசேஷ நாட்களிலும், மாத பிறப்பையொட்டியும் வீட்டின் தரையை கழுவி சுத்தம் செய்வார்கள்.

வெள்ளை நிற வினிகர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்தால் வீடு தூய்மையாக மாறுவதுடன் பளபளப்பாகவும் காட்சி தரும். கதவுகளை மாதம் ஒரு முறையாவது சுத்தம் செய்து விட வேண்டும். ஜன்னல்களில் தூசி படிய வாய்ப்பு உள்ளதால் அதனை அடிக்கடி துடைத்து வருவது தூய்மையோடு உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும். அதுபோல திரைச்சீலைகள், குஷன் கவர், சோபா கவர், மெத்தை கவர் போன்றவற்றை மாதம் ஒரு முறையாவது சலவை செய்துவிட வேண்டும்.

womens,maintainenece,home,clean ,பெண்கள், பராமரிப்பு, வீடு, சுத்தம்

குளியல் அறைகளை சுத்தம் செய்யும்போது கரப்பான் பூச்சிக்கொல்லி, எறும்புக் கொல்லிகளை பயன்படுத்தி சுத்தம் செய்தால் பூச்சிகள் வராமல் தடுக்கலாம். அதே போல் வீட்டை அலங்கரிக்கும் அலங்கார பொருட்களையும் அடிக்கடி துடைத்து சுத்தப்படுத்தினால் அவைகள் கண்கவர் அழகில் எப்போதும் காட்சி அளிக்கும். எந்த பொருட்களையும் ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும். மேலும் அறையின் எந்த இடத்தில் வைத்தால் எடுப்பாக இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டு அலங்கரித்தால் அறை அற்புதமாக காட்சி அளிக்கும்.

அலமாரிகள், சமையல் அறையில் பொருட்கள் வைக்கும் இடங்கள் போன்ற வற்றையும் தூசு தட்டிவிட வேண்டும்.எப்படியும் நாம்தான் சுத்தம் செய்யப்போகிறோம் என்பதை மனதில்கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்து வந்தால் குப்பை சேராது. அதுபோல் சுவர்களில் வெடிப்பு, கீறல் ஏற்பட்டால் அதனை உடனுக்குடன் சரிசெய்து விடவேண்டும். ஆண்டு இடைவெளியில் வீட்டுக்கு வர்ணம் பூசிவர வேண்டும். அது வீட்டுக்கு அழகை கூட்டுவதுடன், பராமரிப்பு பணியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டை வெறும் கட்டிடமாக பார்க்காமல் கனவு கட்டி எழுப்பிய கோட்டையாக என்றும் நினைத்து பராமரிக்க வேண்டும்.

Tags :
|
|