Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • குழந்தைகளுக்கு தொடர்ந்து முடி உதிர்ந்து கொண்டிருந்தால் அதனை நிவர்த்தி செய்வது எப்படி ?

குழந்தைகளுக்கு தொடர்ந்து முடி உதிர்ந்து கொண்டிருந்தால் அதனை நிவர்த்தி செய்வது எப்படி ?

By: Karunakaran Thu, 01 Oct 2020 3:30:10 PM

குழந்தைகளுக்கு தொடர்ந்து முடி உதிர்ந்து கொண்டிருந்தால் அதனை நிவர்த்தி செய்வது எப்படி ?

ஒவ்வொரு மனிதனும் தினமும் சில முடிகளை இழக்கிறான். அது இயல்பானது. ஆனால் குழந்தைகளும் இத்தகைய பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு தொடர்ந்து முடி உதிர்ந்து கொண்டிருந்தால் அதற்கான காரணத்தை பெற்றோர் கண்டுபிடித்து நிவர்த்தி செய்வது அவசியமானது. சில குழந்தைகளுக்கு உச்சந்தலையில் அரிப்பு அல்லது சிவப்பு நிறத்தில் திட்டுக்கள் காணப்படும். அவை முடி உதிர்வுக்கு வழிவகுக்கும்.

முடி உதிர்ந்த இடத்தில் கறுப்பு நிறத்தில் சிறிய புள்ளிகளையும் காணலாம். இத்தகைய பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்கு நீண நீர் செல்லும் பாதையில் வீக்கம், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். ‘டெர்மடோபைட்டுகள்’ எனும் பூஞ்சைகள்தான் இந்த பிரச்சினைக்கு காரணமாகும். மற்றவர்களின் சீப்பு, படுக்கை விரிப்புகளை பகிர்ந்து கொள்வதால் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு இது பரவும். ஆரம்பத்தில் தலையில் திட்டுக்களாக முடி உதிர்ந்து பின்பு வழுக்கையை உருவாக்கும்.

remedy,hair loss,children,girls ,நிவர்த்தி , முடி உதிர்தல், குழந்தைகள், பெண்கள்

உச்சந்தலையில் இருக்கும் மயிர்க்கால்களில் தொற்று ஏற்படுவது ‘டெலோஜென் எப்ளூவியம்’ எனப்படும். இதுவும் முடி உதிர்தலை ஏற்படுத்தும். கொலோஜென் என்பது முடி வளர்ச்சியில் முக்கிய அங்கம் வகிக்கக்கூடியது. அதன் செயல்பாடுகளுக்கு இடை யூறு ஏற்படும்போது அதிகமாக முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படக்கூடும். மன அழுத்தம் காரணமாக இந்த பாதிப்பு நேரும். ஊட்டச்சத்து குறைபாடும் முடி உதிர்வதை தூண்டிவிடும்.

புருவங்களிலும் முடி இழப்பு ஏற்பட்டால் அதற்கு ‘அலோபீசியா அரேட்டா’ பாதிப்புதான் காரணமாகும். இது பரம்பரை மரபணுக்கள் வழியாக பரவக்கூடும். குடும் பத்தில் யாருக்காவது முடக்கு வாதம் அல்லது நீரிழிவு நோய் இருந்தால் கூட இந்த பாதிப்பு ஏற்படலாம். ஆரம்ப நிலையிலேயே மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வது நல்ல பலனை தரும். சில குழந்தைகளுக்கு தலைமுடியை இழுக்கும் பழக்கம் இருக்கும். ஒவ்வொரு முடியாக இழுத்துக்கொண்டிருப்பார்கள். இது ஒருவகை மனநல கோளாறாக கருதப்படுகிறது. ‘பிகேவியோரல் தெரபி’ எனப்படும் நடத்தை, ஒழுக்கம் சார்ந்த செயல்பாடுகள் மூலம் இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடலாம்.


Tags :
|