Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை அளிக்கும் திரிகடுகம் காபி

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை அளிக்கும் திரிகடுகம் காபி

By: Nagaraj Tue, 04 Aug 2020 10:52:17 AM

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை அளிக்கும் திரிகடுகம் காபி

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது திரிகடுகம் காபி. கொரோனா பரவலைத் தடுக்கும் போராட்ட நிலையில் வாழ்கிறோம். தற்போது கோடைக்காலம் குறைந்து மழைக்காலம் வரத் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் தொண்டையில் கரகரப்பு ஏற்படுவது சாதாரண நிலைதான் என்றாலும், அதை அப்படியே தவிர்த்துவிட முடியாது. இந்த நிலையில் காபி, டீக்குப் பதிலாக இந்த திரிகடுகம் காபியை இடைப்பட்ட நேரத்தில் குடித்துவருவது மிகவும் நல்லது.

trikadugam,blackberry,pepper,sukku,thippili ,திரிகடுகம், கருப்பட்டி, மிளகு, சுக்கு, திப்பிலி

செய்முறை: 30 கிராம் மிளகு, 50 கிராம் சுக்கு, 5 கிராம் திப்பிலி, சிறிது கொத்தமல்லி ஆகியவற்றை நன்றாகப் பொடித்துக்கொள்ள வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் தேவையான அளவு கருப்பட்டியைக் கரைத்து, அதனுடன் காபி தூள், திரிகடுகம் தூள் கலந்து கொதிக்கவைத்து சூடாகப் பருகலாம்.

பயன்கள்: சித்த மருத்துவத்தில் ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை’ எனச் சொல்வார்கள். சுக்கை தோல் சீவித்தான் பயன்படுத்த வேண்டும். மிளகு, பசியைத் தூண்டும்; பித்தத்தைச் சமப்படுத்தும்; உடலில் உள்ள நச்சுத்தன்மையை முறிக்கும். திப்பிலி, கோழையைப் போக்கும். சளிப் பிரச்னைகள் நீக்கி, உடலை உற்சாகம் அடையச் செய்யும். பால் சேர்க்காமல் கருப்பட்டி சேர்த்து அருந்துவதால், உடல் வலுவாகும்.

Tags :
|
|