Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பொறுப்பற்ற செயல்கள் சில நேரங்களில் ஆண்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும்

பொறுப்பற்ற செயல்கள் சில நேரங்களில் ஆண்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும்

By: Karunakaran Tue, 22 Dec 2020 12:50:59 PM

பொறுப்பற்ற செயல்கள் சில நேரங்களில் ஆண்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும்

பாலியல் தொந்தரவுகள் தரும் ஆண்களை சட்டம் தண்டிக்கிறது. வம்புக்கிழுக்கும் ஆண்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனால் அப்பாவியான ஆண்கள் பலிகடா ஆவது தவிர்க்கப்பட வேண்டும். அலுவலகத்தில் வேலைசெய்யும் பணியாளர்கள் மத்தியில் வேடிக்கையாக பேசிக்கொண்டிருந்த ஆண் ஒருவரை, அங்கிருந்த பெண் ஒருவர் சட்டையை பிடித்து இழுத்து அடித்துவிட்டார். பின் அவர் தன்னை திட்டமிட்டு அவதூறாக பேசிவிட்டதாக நினைத்த அந்த பெண், மேலதிகாரியிடம் புகார் கொடுத்துவிட்டார்.

ஒழுக்கமில்லாத ஆட்களுக்கு இங்கே இடமில்லை என்று கூறி அந்த நபரை வேலையை விட்டே நீக்கிவிட்டார்கள். இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் சில நேரங்களில் ஆண்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும். ஒரு பெண்ணின் எதிர்காலம் போலவே ஒரு ஆணின் எதிர்காலமும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இப்போது எங்கு பார்த்தாலும் கூட்டம். நடைபாதைகளிலோ, பஸ்களிலோ தவறுதலாக பெண்களை, ஆண்கள் உரசிவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. பாதிக்கப்படுவதாக உணரும் பெண் களுக்கு அந்த நேரத்தில் கோபம் வருவது இயற்கைதான். ஆனால் சற்று நிதானித்து வேண்டுமென்றே தவறு செய்தாரா என்பதையும், கூட்ட நெரிசல் சூழலையும் கருத்தில் கொண்டே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

irresponsible actions,men,harrashment,women ,பொறுப்பற்ற செயல்கள், ஆண்கள், துன்புறுத்தல், பெண்கள்

பெண் சொல்வதைதான் எல்லோரும் நம்புவார்கள் என்ற சமூக பலத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு, அப்பாவி ஆண்களை அவமதித்து குற்றவாளிகளாக்கி விடக்கூடாது. பெண்களின் ஆழ்மனதில் பொதுவாக எப்போதுமே ஒருவித பாதுகாப்பற்ற தன்மை இருந்துகொண்டே இருக்கும். அதை தவிர பெண்களுக்கு எதிராக நாட்டில் நடக்கும் பல்வேறு விதமான பாலியல் வன்முறைகளும் அவர்கள் மனதில் பதிந்து, அவர்களது மூளையின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து எச்சரிக்கை சிக்னல் கொடுத்துக்கொண்டே இருக்கும். தனக்கு பாதுகாப்பு இல்லாதது போலவும், தன்னை யாரோ பின்தொடர்வது போலவும் அவர்களது உள்ளுணர்வு சொல்லும். அதனால்தான் ஒரு சின்ன உரசல்கூட அவர்களை சந்தேகப் பார்வை பார்க்க வைத்துவிடுகிறது.

அந்த நேரத்தில் ஏதோ ஒரு அசவுகரியத்தை உணர்கிறார்கள். அதனால் ஏற்படும் ஆவேசம்தான், அத்தகைய ஆண்களுக்கு எதிராக பெண்களை செயல்பட தூண்டுகிறது. பெண்களுக்கு எதிரான தவறுகள் ஒருபுறம் நடந்தாலும், அந்த தவறு வேண்டுமென்றே நடந்ததா? தற்செயலாக நடந்ததா? என்று சிந்தித்து செயல்பட வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்களுக்கு நல்லவர்களையும், கெட்டவர்களையும், நல்லவர்கள் என்ற போர்வையில் இருக்கும் கெட்டவர்களையும், கெட்டவர்கள் போன்று தோற்றத்தில் தெரியக்கூடிய நல்லவர்களையும் அடையாளம் காண தெரிந்திருக்கவேண்டும்.

Tags :
|