Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • குழந்தைகளை நன்கு சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியம்

குழந்தைகளை நன்கு சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியம்

By: Karunakaran Thu, 03 Dec 2020 2:08:10 PM

குழந்தைகளை நன்கு சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியம்

குழந்தைகளாக இருந்தாலும், சுத்தமாக இருந்தால் தான் அனைவருக்கும் பிடிக்கும். அதனால் தான் குழந்தைகளை நன்கு சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. பெற்றோர்கள் குழந்தைகளின் சுத்தம் பற்றிய ஒருசில அடிப்படைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. குழந்தைகளின் கால்கள் மற்றும் கைகளில் உள்ள நகங்களை வெட்டுவது என்பது மிகவும் கடினமான செயல். ஆனால் கடினம் என்று நினைத்துவிட்டு விடாமல், பொறுமையுடன் அவர்களின் கை மற்றும் கால்களில் உள்ள நகங்களை அடிக்கடி வெட்டிவிட வேண்டும்.

குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் போதே, அவர்களுக்கு பற்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை துலக்கும் பழக்கத்தை பழக்கிவிட வேண்டும். வேண்டுமெனில் ஆரம்பத்தில் அவர்களுக்கு ‘பேபி மௌத் வாஷ்’ கூட பயன்படுத்தலாம். குழந்தைகளின் முடியானது எப்போதும் ஒரே போன்று இருப்பதில்லை. ஆகவே அவர்களுக்கு சரியான ஹேர் ஸ்டைலில் கூந்தலை வெட்டி விட்டு, பராமரித்தால், அழகாக இருக்கும்.

parents,children,well-groomed,clean ,பெற்றோர், குழந்தைகள், வளர்ச்சி, சுத்தமானவர்கள்

குழந்தை தானே என்று வாரத்திற்கு ஒரு முறை குளிப்பாட்டும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டாம். ஏனெனில் இது குழந்தையின் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. எனவே குளிர்காலமாக இருந்தால், வாரத்திற்கு மூன்று முறையும், கோடை காலமாக இருந்தால், தினமும் குளிப்பாட்ட வேண்டும். குழந்தைகளின் உடல் மீது பால் வாடை வரும். எனவே அவர்கள் பால் குடித்ததும், அவர்களின் வாய், கை போன்றவற்றை கழுவி, பின் பேபி பவுடரை போட்டு விட வேண்டும்.

குழந்தைகளின் அழகைக் கெடுக்கும் வகையில் இருக்கும் பெரிய உடைகளை அணிவிக்க வேண்டாம். அவர்களுக்கு நல்ல பொருத்தமான, வறட்சியான உடைகளை அணிவிக்க வேண்டும். குழந்தைக்கு தினமும் மறக்காமல் தலை சீவி விட வேண்டும். இதனால் அவர்களுக்கு கூந்தல் நன்கு வளரும். குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது மறக்காமல் கால்களுக்கு ஷூக்களை அணிவிக்க வேண்டும். தினமும் பேபி லோசனை உடலில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். குழந்தைகள் தூங்கும் போதும் அல்லது எங்கேனும் வெளியே செல்லும் போதும் டயப்பரை அணிவித்து அழைத்து செல்ல வேண்டும்.

Tags :