Advertisement

உடல் எடை குறைய அத்திப்பழம் சாப்பிடலாம்!

By: Monisha Thu, 26 Nov 2020 12:42:15 PM

உடல் எடை குறைய அத்திப்பழம் சாப்பிடலாம்!

அத்திப்பழங்களைப் பச்சையாகவோ அல்லது உலர வைத்தோ சாப்பிடுவதால் பல நல்ல பயன்கள் கிட்டும். என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

அத்தி பழங்களில் கொழுப்புச்சத்து கிடையாது. உடல் எடை குறைய வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இந்த அத்திப்பழங்கள் சிறந்த தேர்வாகும். அத்தி பழங்களை சாப்பிட்டால் வயிறு நிறைந்த உணர்வு நெடுநேரம் இருக்கும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தின் சர்க்கரை அளவை சரியான முறையில் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.

figs,cholesterol,anemia,diabetes,health ,அத்திப்பழம்,கொழுப்புச்சத்து,இரத்தசோகை,சர்க்கரை நோய்,ஆரோக்கியம்

அத்தி பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள கழிவுகளை அகற்றப் பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக மெனபோஸ் காலத்தில் பெண்களுக்கு அதிகமாக முடி உதிர்தல் பிரச்சனை இருக்கும். அந்த சமயங்களில் அத்தி பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் முடி கொட்டுதலைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

அத்தி பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் உடலில் இரத்த உற்பத்தி மேம்படும். ஆக இதன் மூலம் இரத்தசோகை போன்ற வியாதிகள் விரட்டி அடிக்கப்படும்.

இரத்த ஓட்டம் சீராக நடைபெற அத்தி பழம் உதவும். அந்த வகையில் இதய வியாதி உள்ளவர்களுக்கு அத்தி பழம் பல நன்மைகளைப் பயக்கும்.

Tags :
|
|