Advertisement

உடல் உபாதை பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவம்

By: Nagaraj Fri, 28 Aug 2020 08:16:30 AM

உடல் உபாதை பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவம்

இயற்கையே நமக்காக பல மருத்துவக்குணங்கள் அடங்கிய பொருட்களை கொடுத்துள்ளது. அன்றாடம் நமக்கு ஏற்படும் உடல் உபாதை பிரச்சனைகளுக்கு இயற்கையில் உள்ள மருத்துவங்கள் நல்ல பயன் கொடுக்கும்.

உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடித்தால், வயிற்றில் அமிலம் சுரப்பது குறைவாக இருக்கும். துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

கால் தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவற்றை ஒரு கோப்பை நீரில், கலந்து தினமும் குடித்து வந்தால், உடல் எடை குறைந்துவிடும்.

carrot,tomato juice,honey,guava leaf,relief ,காரட், தக்காளிச்சாறு, தேன், கொய்யா இலை, நிவாரணம்

காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வந்தால், சில நாட்களில் உடல் எடை குறைவதை நாம் உணரலாம். தினமும் காலையில் தொடர்ந்து 12 கருவேப்பிலை இலைகளை சாப்பிட்டு வந்தால், உடல் பருமனில் மிகுந்த மாற்றம் ஏற்படும்.

3 கப் தண்ணீருடன் வெற்றிலை மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து, அதனை சில நாட்களுக்கு குடித்து வந்தால், இருமல் பிரச்சனைகள் நமக்கு அண்டாது. பல்வலி உள்ளவர்கள் துளசி இலை 2, சிறிதளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து வலி உள்ள இடத்தில் வைத்து அழுத்தினால், உடனே வலி குறைந்துவிடும்.

சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க, குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு தினமும் குளிக்க வேண்டும். இதனால் விரைவில் தழும்புகள் மறைந்து விடும். குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு, நீருடன் தேனைக் கலந்து கொடுத்தால், விரைவில் இருமல் மற்றும் காய்ச்சல் சரியாகிவிடும்.

காரட் மற்றும் தக்காளிச் சாறு ஆகியவற்றுடன், சிறிதளவு தேன் கலந்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், உடல் வலிமை பெற்றுவிடும். வயிற்றுப்போக்கை உடனடியாக நிறுத்த, கொய்யா இலைகளை மென்று தின்றாலே போதும் உடனடி நிவாரணம் கிடைத்துவிடும்.

Tags :
|
|