Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கர்ப்ப காலத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவைப்படும் சத்துக்கள்

கர்ப்ப காலத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவைப்படும் சத்துக்கள்

By: Karunakaran Mon, 02 Nov 2020 2:04:01 PM

கர்ப்ப காலத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவைப்படும் சத்துக்கள்

கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்சியம் சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் என மொத்தம் 11 வகையான சத்துகள், கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவைப்படுகின்றன. கர்ப்ப காலத்தில் ரத்த சோகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரும்புச்சத்து கிடைக்க தினமும் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம் பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிடுங்கள். வாரம் ஒரு முறை வெல்லம் கலந்த உணவு சாப்பிடுங்கள். அவ்வப்போது முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

சுண்டைக்காய், பாகற்காய், முட்டை, இறைச்சி ஆகியவற்றின் மூலம் உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கும். கர்ப்ப காலத்தில் காபி, டீ குடிப்பதை நிறுத்தி விடுங்கள். ஏனெனில் உணவில் இருக்கும் இரும்புச்சத்தை கிரகிக்க முடியாமல் காபி, டீ போன்றவை தடுத்து விடுகின்றன. அதே நேரத்தில் டீ, காபிக்கு பதிலாக கர்ப்பிணிகள் பால் குடிப்பது மிகவும் நல்லதாகும். கருப்பை, நஞ்சு, குழந்தை ஆகியவற்றின் வளர்ச்சி மற்றும் தாயின் ரத்த ஓட்டத்துக்கும் புரத சத்து தேவையாகும்.

nutrients,fetus,pregnancy,baby ,ஊட்டச்சத்துக்கள், கரு, கர்ப்பம், குழந்தை

பால், பருப்புகள், காய்கறிகள், முட்டைகள் ஆகியவற்றில் இருந்து புரதச்சத்து கிடைக்கும். பச்சை காய்கறிகளை சமைக்கும் போது அவற்றில் போலிக் அமில சத்து வெளியேறி விடுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் பச்சை காய்கறிகளை சாப்பிடுவது மிகவும் நல்லதாகும். பிரசவ தேதி நெருங்கும் போது, முதலில் பின் முதுகில் வலி ஏற்படும். தொடர்ந்து அந்த வலி, அடி வயிற்றுக்கு வந்து இரு தொடைகளுக்கும் அது பரவுமானால், அது உண்மையான பிரசவ வலியாகும்.

ஒரு சில கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப பை திறப்பதன் அறிகுறியாக வாந்தி ஏற்படும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல் ஏற்பட்டால் உடனடியாக கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு இந்த 11 வகையான சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்து கொள்வதன் மூலம் பிறக்க போகும் குழந்தைகள் நலமுடன் பிறக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Tags :
|