Advertisement

இதய நோய்களை தடுக்கும் வெங்காய தேநீர்!

By: Monisha Wed, 21 Oct 2020 12:18:39 PM

இதய நோய்களை தடுக்கும் வெங்காய தேநீர்!

வெங்காயத்தில் கூட தேநீர் தயாரித்து குடிக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா? வெங்காயத்தில் தயாரிக்கப்பட்ட தேநீர் குடிக்கும் போது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் வெங்காயத்தில் இருக்கும் குர்செடின் மற்றும் பிளாவனோல் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அதுமட்டுமல்லாமல் இதில் உள்ள குர்செடின் கெட்ட கொழுப்பை குறைக்கும்.

வெங்காய தேநீர் பருகினால் இதய நோய்கள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. வெங்காயத்தில் இருக்கும் கந்தகம் ரத்த உறைவதை கட்டுப்படுத்தும். மேலும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் இந்த தேநீர் உதவுகிறது. ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு கப் வெங்காய தேநீர் குடித்தால் நல்ல மாற்றம் கிடைக்கும். இவ்வளவு நன்மைகள் நிறைந்த வெங்காய தேநீர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

onions,tea,bad cholesterol,blood pressure,heart disease ,வெங்காயம்,தேநீர்,கெட்ட கொழுப்பு,ரத்த அழுத்தம்,இதய நோய்

தேவையான பொருட்கள்
தண்ணீர் – 2 கப்
லவங்கப்பட்டை தூள் – சிறிதளவு
எலுமிச்சை சாறு – சிறிதளவு
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 5 பல்
தேன் – 1 டீஸ்பூன்
பிரியாணி இலை – சிறிதளவு

செய்முறை
வெங்காயம் மற்றும் பூண்டை தோல் எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். அதன்பின் இதில் இரண்டு கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதித்ததும் வெங்காயம், பூண்டு, பிரியாணி இலை போட்டு நன்கு வேக வைக்கவும். வெந்ததும் தண்ணீர் நிறம் மாறி விடும். நிறம் மாறிய பிறகு வடிகட்டி அதில் தேன், லவங்கப்பட்டை தூள், எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துங்கள்.

வெங்காய தேநீரை தினமும் காலையில் குடித்து வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.

Tags :
|
|