Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு இதய வால்வுகளைப் பாதுகாக்கும் வேர்க்கடலை

ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு இதய வால்வுகளைப் பாதுகாக்கும் வேர்க்கடலை

By: Karunakaran Sun, 13 Dec 2020 6:02:07 PM

ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு இதய வால்வுகளைப் பாதுகாக்கும் வேர்க்கடலை

வேர்க்கடலைக்கு ஆயுட்காலத்தையே நீட்டிக்கும் ஆற்றல் உடையது. இதில் நல்ல கொழுப்புகள் உள்ளதால், உடலுக்கு தீங்கு விளைவிக்காது. இதிலுள்ள வைட்டமின் பி மற்றும் சி சத்துக்கள் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.

இதனை சாப்பிட்டால் மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இது கர்ப்பிணிகள் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க உதவுகிறது. நியாசின்’-நிலக்கடலையில் அதிகமாக உள்ளதால், நினைவாற்றல் அதிகரிக்கிறது. பெண்களின் கர்ப்பப்பை சீராகச் செயல்படவும், கட்டிகள், நீர்க்கட்டிகள் வராது தடுக்கும் வல்லமை இதற்குண்டு.

peanuts,antioxidant,protect,heart valves ,வேர்க்கடலை, ஆக்ஸிஜனேற்றம், பாதுகாத்தல், இதய வால்வுகள்

இது ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு, இதய வால்வுகளைப் பாதுகாப்பதோடு, இதய நோய் வராமல் தடுக்கிறது. நிலக்கடலையில் உள்ள ‘பீட்டா கௌமரிக்’ என்ற அமிலம் குடலில் நச்சுப் பொருள் சேருவதைத் தடுக்கிறது. இதனால் குடல் புற்றுநோய் வருவதும்
தடுக்கப்படுகிறது.

விட்டமின் ‘பி’ சத்து சார்ந்த ‘பயோட்டின்’ என்னும் வேதிப்பொருள் முடி வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது; முடி உதிர்வதையும் தடுக்கிறது. இதனை வேக வைத்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்தால், ஊட்டச்சத்து அதிகரித்து, சீரான வளர்ச்சி கிடைக்கும். மூளையும் சிறப்பாக செயல்படும்.

Tags :