Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • செயற்கை மார்பக சிகிச்சைகள் செய்வதால் ஏற்படும் உடல் பிரச்சனைகள்

செயற்கை மார்பக சிகிச்சைகள் செய்வதால் ஏற்படும் உடல் பிரச்சனைகள்

By: Karunakaran Mon, 09 Nov 2020 1:22:47 PM

செயற்கை மார்பக சிகிச்சைகள் செய்வதால் ஏற்படும் உடல் பிரச்சனைகள்

மார்பக அறுவை சிகிச்சையின் போது, செயற்கையான இழை உங்களுடைய மார்பின் மேலாக பொருத்தப்படுகிறது. இவ்வாறு பொருத்தபடும் இழைகளின் தன்மையைப் பொறுத்து செயற்கை மார்பகங்கள் சிலிக்கான் மற்றும் சலைன் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. செயற்கை இழையில் சிலிக்கான் ஜெல் அடைக்கப்பட்டு மார்பகங்களில் பொருத்தப்படுகின்றன. சிலிக்கான் ஜெல் அடைக்கப்பட்ட ஓடுகள் பெண்களின் செயற்கை மார்பக அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

சலைன் வகை அறுவை சிகிச்சையில், உப்பு நீர் கொண்ட செயற்கைப் பொருளை சிலிக்கான் ஓடுகளில் அடைத்து பயன்படுத்துகிறார்கள். சிலிக்கான் வகை அறுவை சிகிச்சையை விட சலைன் வகை அறுவை சிகிச்சையே சிறந்த வழிமுறையாக கருதப்படுகிறது. சுலைன் வகை அறுவை சிகிச்சையின் போது பெருமளவு அபாயங்கள் தவிர்க்கப்பட்டாலும், அதை 100% பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை என்று சொல்ல முடியவில்லை.

physical problems,artificial breast treatment,womens,health ,உடல் பிரச்சினைகள், செயற்கை மார்பக சிகிச்சை, பெண்கள், ஆரோக்கியம்

மார்பக அறுவை சிகிச்சை செய்யும் பெண்களுக்கு முதன்மையான பிரச்னையாக சிலிக்கான் அல்லது சலைன் ஒழுகத் தொடங்கி, மார்பில் அதன் விளைவுகளை காட்டத் தொடங்கும். சலைன் வகை செயற்கை மார்பகத்தில் கோளாறுகள் ஏற்படும் போது அது பாக்டீரியாவை உருவாகவும், உடலில் அச்சுகள் உருவாகவும் வகை செய்யும். செயற்கையான பொருளை உடல் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் மார்பகங்களில் வலி, வீக்கம் மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படும். மார்பக அறுவை சிகிச்சை செய்வதால் மார்பகங்கள் ஒரே அளவாக இல்லாமல் போகவும் கூடும்.

ஒவ்வொரு முறை மார்பக அறுவை சிகிச்சை செய்யும் போதும், அதை 7-8 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சரி செய்ய வேண்டும். இந்த செயற்கை மார்பகங்களில் விரிசல்கள் ஏற்படவோ அல்லது ஒழுகல் ஏற்படவோ வாய்ப்புகள் உண்டு. செயற்கை மார்பகங்களில் விரிசல்கள் ஏற்படுவது அவற்றின் முதன்மையான குறைபாடுகளில் ஒன்றாக உள்ளது. செயற்கை மார்பக சிகிச்சையின் மூலம் மார்பகங்களின் அளவு மற்றும் வடிவம் சற்றே அதிகரிக்கும், இதனை வெளியே தெரியாமல் மறைப்பது கடினம்.

Tags :
|