Advertisement

ஆரோக்கியம் நன்மைகளை வழங்கும் பிஸ்தா பருப்பு!

By: Monisha Fri, 23 Oct 2020 1:58:37 PM

ஆரோக்கியம் நன்மைகளை வழங்கும் பிஸ்தா பருப்பு!

பிஸ்தா பருப்பு பல்வேறு ஆரோக்கியம் நன்மைகளை வழங்குகிறது. பிஸ்தா பருப்பில் வைட்டமின் பி6, வைட்டமின் ஈ, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை அதிக அளவில் உள்ளது.

பிஸ்தா பருப்பானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் வெள்ளை அணுக்களின் உற்பத்தியினை அதிகரிக்கச் செய்கின்றது. பிஸ்தாவானது மண்ணீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. குழந்தைகளுக்கு பிஸ்தா பருப்பினை தினசரி என்ற அளவில் கொடுத்து வந்தால், குழந்தைகளின் மூளை வளர்ச்சி சிறப்பானதாகவும், ஞாபக சக்தியினை அதிகரிப்பதாகவும் இருக்கும்.

பிஸ்தா இதயநோய்கள் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதால் முக்கிய பங்கு வகிப்பதாக உள்ளது, மேலும் இது நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

pistachio nuts,health,vitamins,memory,immunity ,பிஸ்தா பருப்பு,ஆரோக்கியம்,வைட்டமின்,ஞாபக சக்தி,நோய் எதிர்ப்பு சக்தி

பிஸ்தா பருப்பில் உள்ள துத்தநாகம் உடலின் நோயெதிர்ப்புத் சக்தியை அதிகரிக்கிறது. பிஸ்தா பருப்பை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது கர்ப்பிணிகளின் உடலுக்குத் தேவையான மற்றும் முக்கியமான பல ஊட்டச்சத்துக்களைக் தருகிறது.

பிஸ்தாவில் அதிக அளவில் வைட்டமின்கள் உள்ளது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மேலும் இது, செல்களுக்கு தேவையான ஆக்சிஜனையும் கொடுக்கிறது.

பிஸ்தா பருப்பில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது, இரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ ஆனது, புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் வராமல் இருக்கவும் உதவுகிறது.

Tags :
|
|