Advertisement

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சின்ன வெங்காயம்!!

By: Monisha Wed, 05 Aug 2020 12:30:38 PM

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சின்ன வெங்காயம்!!

சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது தான் அதன் முழு மருத்துவ பயன்கள் நமக்கு கிடைக்கும். அதனால் முடிந்த அளவு சின்ன வெங்காயத்தை பச்சையாக எடுத்து கொள்வது மிகவும் நல்லது.

சின்ன வெங்காயத்தை அரைத்து முடியின் மயிர்க் கால்களில் பூசி வந்தாலே போதும், முடிவளர ஆரம்பிக்கும். அரைத்த வெங்காயத்தை முடியின் வேர்க்கால்களில்படும் படியும், வழுக்கை விழுந்த இடத்திலும் தேய்க்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு நாட்கள் என்று பயன்படுத்திவர தலைமுடி வளர ஆரம்பிக்கும்.

heart,health,small onion,fat,uric acid ,இதயம்,ஆரோக்கியம்,சின்ன வெங்காயம்,கொழுப்பு,யூரிக் அமிலம்

தினமும் ஒரு சின்ன வெங்காயம் எடுத்து கொள்ளும் போது இரத்த நாளங்களில் இருக்கும் அடைப்பை ஏற்படுத்தக் கூடிய கொழுப்பை கரைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

அதிகமான அளவு யூரிக் அமிலம் சேருவதன் காரணமாக தான் நமக்கு சிறுநீரக கற்கள் உண்டாகிறது. இதற்கு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வரும்போது யூரிக் அமிலத்தால் ஏற்படும் கற்கள் கரைந்து விடும்.

முதுமையில் ஏற்படும் மூட்டு வலி, முதுகு வலி மற்றும் இடுப்பு வலிக்கு சின்ன வெங்காயத்தை தொடர்ச்சியாக எடுத்து வரும்போது இது போன்ற பிரச்சனைகள் வராது.

Tags :
|
|
|