Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பல் வலியை குறைக்க உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்!

பல் வலியை குறைக்க உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்!

By: Monisha Thu, 09 July 2020 3:18:57 PM

பல் வலியை குறைக்க உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்!

இன்றய காலகட்டத்தில் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல் சொத்தை பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். பல் வலியை விட கொடுமையான வலி எதுவுமில்லை என்று கேள்விப்பட்டிருப்போம். இது மாதிரி எல்லாம் சிரமப்படாமல் இருக்க வருமுன் காப்பது நல்லது.

எந்த உணவைச் சாப்பிட்ட பிறகும் வாயைச் சுத்தமாகக் கழுவிக் கொள்ளுதல் அவசியம். அப்படி சுத்தமாக வாயைக் கழுவாத இருக்கும்பொழுது கிருமிகள்(பாக்டீரியாக்கள்) பற்களைச் சென்று தாக்கும். இதனால் பல் சொத்தை பாதிப்பு ஏற்படும். பல் சொத்தை ஏற்பட்ட ஆரம்பக்கட்டத்தில் சாதாரண கரும்புள்ளி தென்படும். பிறகு பல்லில் சிறு ஓட்டை ஏற்படும். பின் கவனிக்காமல் விட்டால் பல் கடுமையாக வலிக்க தொடங்கும். இந்த பதிவில் பல் வலியைக் குறைக்க சில வீட்டு வைத்திய குறிப்புகளைப் பார்க்கலாம்.

toothache,tooth,clove,salt,neem ,பல்வலி,பல் சொத்தை,கிராம்பு,உப்பு,வேப்பிலை

சிறிதளவு துளசி இலைகள், உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை வலி உள்ள இடத்தில் வைத்துத் தேய்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் பல் வலி குணமாகும்.

சொத்தையான பல்லில் கிராம்பை வைத்து சிறிது நேரம் அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது சிறிது நேரத்தில் பல் வலி சரியாகிவிடும்.

மிதமான சுடுநீரில் கல் உப்பைக் கலந்து கொள்ள வேண்டும். தினமும் ஒரு வேளை இந்த நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கிருமிகள் கொல்லப்படும். பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்.

toothache,tooth,clove,salt,neem ,பல்வலி,பல் சொத்தை,கிராம்பு,உப்பு,வேப்பிலை

மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி. பல் சொத்தையான இடத்தில் மஞ்சளைத் தடவிக்கொள்ள வேண்டும். சில நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளித்துக் கொள்ளுதல் அவசியம். இதைத் தினமும் செய்து வர பல் சொத்தை குணமாகும்.

வேப்பிலை சாற்றைப் பல் சொத்தை உள்ள இடத்தில் தடவ வேண்டும். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு சற்று மிதமான சுடுநீரில் வாய் கொப்பளித்தல் வேண்டும். வேம்பு இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் குணம் கொண்டது. இவ்வாறு செய்வதன் மூலம் பல் சொத்தை குணமாகும். பல்வலி தீரும். அந்த காலத்தில் இந்த வேப்பிலையின் மகத்துவத்தை அறிந்துதான் நம் முன்னோர்கள் வேப்பங்குச்சியில் பல் துலக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|