Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நோய் தொற்றுக்களில் இருந்து தப்பித்துக்கொள்ள இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்!

நோய் தொற்றுக்களில் இருந்து தப்பித்துக்கொள்ள இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்!

By: Monisha Fri, 11 Dec 2020 09:07:55 AM

நோய் தொற்றுக்களில் இருந்து தப்பித்துக்கொள்ள இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்!

மழை மற்றும் பனி காலங்களில் பல விதமான நோய் கிருமிகள் நம்மை தாக்க அதிக வாய்ப்புள்ளது. நோய் தொற்றுக்கள் எளிதில் நம்மை அணுகாமல் இருக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். இந்த பதிவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை தெரிந்துகொள்வோம்.

வால்ட் நட் மற்றும் மீன்களில் அதிக அளவு ஒமேகா 3 அமிலம் காணப்படுகிறது. ஒமேகா 3 அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. முருங்கைக்கீரை ரத்தத்தை சுத்தம் செய்வதுடன், எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் முருங்கைக் கீரையில் உள்ள சத்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

நெல்லிக்காய், கொய்யாவை, குடை மிளகாய், தக்காளி போன்ற உணவுகளை தினமும் உணவில் எடுத்து கொள்ளலாம். மேலும் தினமும் பழங்களை உணவில் சேர்த்து கொள்ளவது நல்லது. வைட்டமின் சி அதிகம் காணப்படும் இந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நோயெதிர்ப்பு சக்தி உருவாகும்.

infection,walnut,fish,gooseberry,ginger ,நோய் தொற்று,வால்ட் நட்,மீன்,நெல்லிக்காய்,இஞ்சி

இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை உணவில் எடுத்துக்கொள்ளலாம். மேலும் 1கிராம் சுத்தமான பூண்டுவை 2 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 7 நாட்கள் தொடர்ச்சியாக சாப்பிட்டால் நோய் தொற்றுகள் நம்மை நெருங்காமல் பாதுகாக்கலாம்.

சுவாச பிரச்சனைகளை சரி செய்வதில் துளசி மிகவும் பயன்படுகிறது. சுவாச பிரச்சனைகள் நம்மை அணுகாமல் இருக்க துளசி இலைகளை பயன்படுத்தி தேநீர் தயாரித்து குடிக்கலாம். இஞ்சியுடன் துளசியை சேர்த்து ஜூஸ் செய்து குடிக்கலாம்.

இயற்கையாகவே சிறந்த கிருமிநாசினி உடையது மஞ்சள் . மஞ்சள் கலந்து செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நமது உடலில் தங்கியுள்ள நச்சுகள், குடற் பூச்சிகள் போன்றவை அழிகின்றன. ஆகவே தவறாமல் உணவு பொருள்களில் அளவோடு மஞ்சள் உபயோகப்படுத்தலாம்.

Tags :
|
|