Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இயற்கை வழிமுறை

நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இயற்கை வழிமுறை

By: Nagaraj Wed, 23 Dec 2020 11:13:59 PM

நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இயற்கை வழிமுறை

நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இயற்கை வழிமுறைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

தொடர்ந்து சளி பிரச்சினையால் அவதிப்பட்டு வருபவர்கள் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கப் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வரலாம். தினமும் இரண்டு முறை பருகி வந்தால் சளி இளகி வெளியேறும். அதனை வெளியேற்றுவதன் மூலம் நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

பிராணயாமா போன்ற ஆழ்ந்த சுவாச பயிற்சிகளை மேற்கொள்வது சளியை வெளியேற்ற உதவும். உடற்பயிற்சியும் கைகொடுக்கும். சுவாசத்தை அதிகரிக்க செய்யும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது சளி இளகி வெளியேறும்.

lung,protection,steam,herbs,turmeric ,நுரையீரல், பாதுகாப்பு, நீராவி, மூலிகைகள், மஞ்சள்

ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து மிதமான சூட்டில் வாய் கொப்பளித்து வருவதும் நல்லது. நீராவி பிடிப்பதும் சளியை விரட்டும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் மூலிகைகளையோ, ஆவி பிடிக்கும் மாத்திரையையோ போட்டு தலையை துணியால் மூடி நீராவியை முகத்தில் பிடிக்கலாம்.

நீராவியில் இருந்து வெளிப்படும் சூடான காற்றை சுவாசிக்கும்போது சளி இளகி வெளியேற தொடங்கும்.

Tags :
|
|
|