Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மன அழுத்தத்தை போக்க முன்னெடுத்துள்ள உலக சுகாதார அமைப்பு

மன அழுத்தத்தை போக்க முன்னெடுத்துள்ள உலக சுகாதார அமைப்பு

By: Karunakaran Thu, 27 Aug 2020 4:03:09 PM

மன அழுத்தத்தை போக்க முன்னெடுத்துள்ள உலக சுகாதார அமைப்பு

உலக அளவில் மக்களிடம் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால் தான் வாருங்கள் மனந்திறந்து பேசலாம்.. மன அழுத்தத்தை போக்கலாம் என்ற கோஷத்தை, உலக சுகாதார அமைப்பு முன்னெடுத்துள்ளது. மகிழ்ச்சியை குறைக்கும் மன அழுத்தத்தை, திட்டமிட்ட சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தி, குணப்படுத்தி விடலாம். போதைபழக்கம் மட்டும் இல்லாமல் இருந்தால், மன அழுத்தத்தில் இருந்து மீள்வது எளிது.

லேசான மன அழுத்த பாதிப்பு கொண்டவர்களுக்கு மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனை மட்டுமே போதுமானது. நிபுணர்கள் சொல்வதை பின்பற்றி நடக்கவேண்டும். சில பயிற்சி முறைகளை மேற்கொள்ள வேண்டும், மேலும் இதற்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் அவசியம். மனஅழுத்த அறிகுறி கொண்ட சிலர் எப்போதும் தூங்கிக்கொண்டே இருப்பார்கள். சதா நேரமும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அளவு கடந்த கோபத்தை வெளிக்காட்டுவர். சிலரோ திடீரென்று தனிமையைத் தேடிச்செல்வர். பின்பு அளவுக்கு அதிகமாக கூட்டத்தோடு நெருங்கிப் பழகிக் கொண்டாடுவார்கள்.

world health organization,alleviate,stress,womens ,உலக சுகாதார அமைப்பு, ஒழிப்பு, மன அழுத்தம், பெண்கள்

பெண்களைப் பொறுத்தவரையில் மாதவிலக்கு தொடங்கும் சில நாட்களுக்கு முன்பும், பிரசவத்திற்கு பிறகும், மாதவிலக்கு முழுமையாக நின்றுபோகும் ‘மெனோபாஸ்’ காலகட்டத்திலும் பெண்களின் உடலில் இயற்கையாகவே ஹார்மோன் சுரப்பதில் சீரற்ற நிலை உருவாகும். அப்போதெல்லாம் அவர்களுக்கு மன அழுத்தம் உருவாகி, மறையும். ‘ஹைப்போ தைராய்டு’ நோய் இருப்பவர்களுக்கும் மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் தோன்றும். உடலில் வெயில் படாமலே இருந்தாலும் மனநிலையில் மாற்றம் ஏற்படும்.

யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டு மானாலும் மன அழுத்தம் ஏற்படலாம். அதில் இருந்து எல்லோராலும் மீள முடியும். மன அழுத்தமின்றி மகிழ்ச்சியாக வாழ, தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை உருவாக்குங்கள். குடும்ப உறவுகளை மேம்படுத்துங்கள். நட்பு வட்டத்தை ஏற்படுத்துங்கள். நெருக்கமானவர்களிடம் மனந்திறந்து பேசுங்கள். உங்கள் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் மனம் விட்டுப் பேசுங்கள். நீங்கள் மனம்விட்டு பேசுவது, உங்களிடம் பேசுபவரையும் மனம்விட்டு பேசச்செய்யும்.

Tags :
|