Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தண்ணீர் குடிப்பதற்கு வரைமுறை இருக்கு... இதை மீறி குடிக்காதீங்க!

தண்ணீர் குடிப்பதற்கு வரைமுறை இருக்கு... இதை மீறி குடிக்காதீங்க!

By: Monisha Tue, 15 Dec 2020 09:04:56 AM

தண்ணீர் குடிப்பதற்கு வரைமுறை இருக்கு... இதை மீறி குடிக்காதீங்க!

மனிதன் வாழ்வதர்க்கு முக்கிய ஆதாரம் தண்ணீர். உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிக முக்கியம். தினமும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் அருந்த வேண்டும். இருப்பினும் தண்ணீரை குடிப்பதற்கு சில வரைமுறைகள் உள்ளன. நாம் எந்தெந்த நேரங்களில் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன் அதிக தண்ணீரை குடிக்க கூடாது என்று தெரிந்துகொள்வோம்.

தண்ணீரை கிடைத்த நேரத்திலெல்லாம் குடிக்க கூடாது. சிலர் மிளகாய் போன்ற காரமான பொருளை சாப்பிட்டு விட்டு காரத்தன்மையை பொறுக்க முடியாமல் உடனடியாக கையில் கிடைக்கும் தண்ணீரை மடக் மடக் என குடித்து முடித்து விடுவார்கள். சுமாராக ஒன்றிலிருந்து 2 லிட்டர் தண்ணீரை வயிற்றில் நிரப்பி விடுவார்கள். இது மிகவும் தவறு. மிளகாயின் காரத்தோடு தண்ணீரையும் சேர்த்து குடிப்பதால் அது குடல் பகுதிக்கு சென்று வயிற்றில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். ஆகையால் மிளகாய் போன்ற காரமான உணவுகளை உண்டவுடன் தண்ணீர் குடிக்காதீர்கள்.

water,health,alkalinity,exercise,kidney ,தண்ணீர்,ஆரோக்கியம்,காரத்தன்மை,உடற்பயிற்சி,சிறுநீரகம்

சிலர் இரவு தூங்க போகும் முன்னராக அதிக அளவில் தண்ணீர் குடித்து விட்டு படுக்க செல்வார்கள். நம்முடைய சிறுநீரகமானது இரவு நேரத்தில் கொஞ்சம் ஓய்வெடுத்து மெதுவாகவே வேலை செய்யும். இந்த நேரத்தில் நீங்கள் குடிக்கும் அளவுக்கு அதிகமான நீரானது கிட்னிக்கு அதிக அளவிலான வேலைப்பளுவை ஏற்படுத்தும். இதனால் மிகவிரைவில் சிறுநீரகம் பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் இரவில் அதிக அளவில் தண்ணீர் குடிக்கும் பொழுது நம்முடைய நிம்மதியான தூக்கமும் தடைபடும்.

சிலர் உணவு உண்ணும் பொழுது சாப்பிட்டு கொண்டே தண்ணீர் அருந்துவார்கள். இது மிக தவறு. இப்படி நீங்கள் சாப்பிடும் பொழுது தண்ணீர் குடிப்பதால் அது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். வாயு தொல்லை, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். உணவு உண்ணும் 1/2 மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது உண்ட பிறகு அரை மணிநேரம் கழித்தோ தண்ணீர் குடிக்க வேண்டும்.

water,health,alkalinity,exercise,kidney ,தண்ணீர்,ஆரோக்கியம்,காரத்தன்மை,உடற்பயிற்சி,சிறுநீரகம்

சிலர் காலையில் எழுந்தவுடன் லிட்டர் லிட்டராக தண்ணீர் குடிப்பார்கள். உங்களுக்கு தாகம் எடுக்காமலே இப்படி வாந்தி வரும் அளவிற்கு தண்ணீர் குடிப்பது மிகவும் ஆபத்தான விஷயம். காலையில் எழுந்தவுடன் தாகம் இருந்தால் மட்டுமே கொஞ்சம் கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் ஒருநாள் உடல் தேவைக்கான தண்ணீரில் கால்பங்கு தண்ணீரை 1/2 மணிநேரத்தில் இடைவெளி விட்டு குடிக்க வேண்டும். இதில் நீங்கள் குடிக்கும் காபி, தேநீர், பழ ஜூஸ் போன்றவையும் அடங்கும் .

சிலர் உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிக வேகமாக உடற்பயிற்சி செய்து அதனால் உடல் வேர்த்து உடனடியாக அதிக அளவில் நீரை குடிப்பார்கள். இதனால் உடலின் தட்பவெப்பம் அதிகரித்து மயக்கம், வாந்தி,தலைவலி போன்றவை ஏற்படும். பொதுவாக பலரும் தண்ணீரை வாயிலிருந்து 2 இன்ச் தூக்கி விட்டு குடிப்பார்கள். அது தவறு. தண்ணீரை வாய் வைத்து மெதுவாக குடிக்க வேண்டும். மடக் மடக் என வேகமாக குடிக்க கூடாது.

Tags :
|
|