Advertisement

சமையலுக்கு மிகவும் சிறந்த எண்ணெய் இது தான்!

By: Monisha Mon, 26 Oct 2020 09:27:43 AM

சமையலுக்கு மிகவும் சிறந்த எண்ணெய் இது தான்!

சமையலுக்கு மிகவும் சிறந்த எண்ணெயாக மீன் எண்ணெய் உள்ளது. மீன் எண்ணெயை பயன்படுத்தினால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் உருவாகாமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த எண்ணெய் மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த எண்ணெய் மிகவும் பெரிய மீன் வகைகளான மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த வகை மீன்களை நாம் சாப்பிடுவதற்கு பயன்படுத்துவதில்லை. ஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப் படுகின்றன.

இந்த எண்ணெயை சாப்பிட்டால் மன அழுத்தம் குறைந்து ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள இ பி எ (EPA) என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை சுறுசுறுப்பாக்கி மன அழுத்தமும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

சிலருக்கு குளிர்க்காலங்களில் மூட்டு வலி அதிகமாக ஏற்படும். அப்படிப்பட்டவர்களுக்கு மூட்டு வலி நிவாரணியாக செயல்படுகிறது. மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். அதுமட்டுமல்லாமல் பெண்களின் இடுப்பு எலும்புகளை கூட வலுவடைய செய்கிறது.

பொதுவாகவே எண்ணெய் வகை தின்பண்டங்கள் மற்றும் எண்ணெய் உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் மற்றும் பலவிதமான நோய்கள் ஏற்படும். ஆனால் உடல் எடையை குறைக்க மீன் எண்ணெய் உதவுகிறது.

fish oil,agility,omega,fatty acids,brain development ,மீன் எண்ணெய்,சுறுசுறுப்பு,ஒமேகா,ஃபேட்டி ஆசிட்,மூளை வளர்ச்சி

மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் ரத்தத்திலுள்ள டிரைகிளிசரைடு எனும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு அளவு அதிகரிப்பதைத் தடுக்கும். இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், மிகுந்த ஆரோக்கியத்தை தரும்.

ஆஸ்துமா பிரச்சனை ஏற்பட்டாலே சுவாசிக்க மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், சுவாசக் கோளாறு பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும். மீன் எண்ணெய் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

கர்ப்பமாக இருக்கும் பெண்களில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிய மீன் எண்ணெய் உதவுகிறது. மேலும் இந்த எண்ணெய் பயன்படுத்துவதால் மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.

ஹார்மோன் சமந்த பட்ட பிரச்னை உடையவர்களுக்கு இது மிகவும் உதவுகிறது. மீன் எண்ணெயில் உள்ள ஆல்பா லீனோலிக் போன்ற அமிலங்கள் இருக்கின்றன. இவை ஹார்மோன்கள் சுரக்க செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன

மீன் எண்ணெய் மாத்திரைகள் கூட மிகவும் பயனுள்ளவைகள். இவை அலசர், சருமம் சம்மந்த பட்ட பிரச்சனைகள் மற்றும் இதய நோய் போன்ற பலவிதமான நோய்களை குணமாக்க உதவுகிறது.

Tags :
|