Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சர்க்கரைக்கு மாற்றாக இதை பயன்படுத்தி... ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்!

சர்க்கரைக்கு மாற்றாக இதை பயன்படுத்தி... ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்!

By: Monisha Fri, 18 Dec 2020 3:06:55 PM

சர்க்கரைக்கு மாற்றாக இதை பயன்படுத்தி... ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்!

இனிப்பு இல்லாமல் நாம் உண்ணும் உணவு முழுமையடையாது. இருப்பினும், எல்லா உணவு வகையிலும் சர்க்கரையை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தும் 5 வழிகளை தெரிந்துகொள்ளுவோம்.

தேன் இனிப்பு சுவைக்கு சரியான தேர்வு. இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட தேனில், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்களும் அடங்கியுள்ளன. தண்ணீரும் இருக்கிறது. தேனை உட்கொள்வதால் ரத்த ஓட்டம் மேம்படும், ரத்த அழுத்தம் குறையும். இருமல் மற்றும் சளி போன்றவை ஏற்படாமல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

வெல்லம், நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி போன்றவை இந்தியாவின் பரம்பரிய உணவின் அங்கமாய் உணவின் இனிப்பு சுவைக்கு அடிப்படையாக இருப்பவை. இவற்றின் சுவை நன்றாக இருக்கும் என்பதோடு, ஆரோக்கியத்தையும் மேம்படுத்துபவை. நமது பாரம்பரிய இனிப்புப் பொருட்களை உண்டால், அஜீரணம், இருமல் போன்ற பிரச்சினைகளை குறையும்.

sugar,honey,dried fruits,calories,health ,சர்க்கரை,தேன்,உலர் பழங்கள்,கலோரி,ஆரோக்கியம்

ஸ்டீவியா என்ற மருத்துவப்பெயரைக் கொண்ட சீனித்துளசி, மிட்டாய் இலை, இனிப்பு இலை மற்றும் சர்க்கரை இலை என்றும் அறியப்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த மாற்று சர்க்கரையாகும். சீனித்துளசியில் கலோரிகள் குறைவாக உள்ளது. எனவே, உடல் எடையை குறைக்க இது சிறந்தது. சீனித்துளசியை உண்பதால் பற்களில் சிதைவு ஏற்படாது, வயிற்றில் அமிலங்கள் உருவாவதைக் குறைக்கும் சீனித்துளசி, ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

இனிப்பு சாப்பிட விரும்பினால் உலர்ந்த பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இதில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. பேரீச்சம்பழம், உலர் திராட்சை, அத்திப்பழம், பாதாம் பருப்பு போன்றவற்றை உண்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

இனிப்பு சாப்பிட விரும்புவோருக்கு நல்ல மாற்று என்றால் மாம்பழம், வாழைப்பழம், கேரட், பப்பாளி, ஆப்பிள், தர்பூசணி போன்ற பழங்கள். பழங்களில் பல நன்மைகள் அடங்கியுள்ளன.

Tags :
|
|