Advertisement

இஞ்சி நம் உடலுக்கு வழங்கும் பல்வேறு நன்மைகள்

By: Karunakaran Tue, 20 Oct 2020 8:30:43 PM

இஞ்சி நம் உடலுக்கு வழங்கும் பல்வேறு நன்மைகள்

இஞ்சியை சில உணவுகளில் சரியான விகிதத்தில் சேர்த்து கொண்டால், குறிப்பிட்ட உணவின் ருசி அலாதியாகும் என அனைவருக்கும் தெரியும். உணவில் இஞ்சியை சேர்த்து கொண்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இவற்றை தாண்டி இஞ்சி நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும். மற்ற உணவு வகைகளை விட இஞ்சியில் அதிகளவு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலில் சர்க்கரை நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

அழற்சியை நீக்கும் தன்மை இஞ்சியில் ஏராளம். இது மாரடைப்பு மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்றவை ஏற்படுவதை தடுக்க உதவும். அதிகளவு முட்டி வலி கொண்டவர்கள் ஆறு வாரத்திற்கு தினமும் இரண்டு முறை இஞ்சி சாறு குடித்ததால், வலி குறைந்ததாக 2001 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்துவதில் இஞ்சியை வேறு எந்த உணவும் மிஞ்ச முடியாது.

ginger,body,ginger tea,anti-oxidants ,இஞ்சி, உடல், இஞ்சி தேநீர், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு குமட்டல் ஏற்படும் போது மிகவும் பாதுகாப்பான உணவு இது. தினமும் 250 மில்லி கிராம் இஞ்சி மாத்திரைகளை உட்கொண்டவர்களுக்கு குமட்டல் குறைந்ததாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்படும் வலியை குறைப்பதில் இஞ்சி சிறப்பாக வேலை செய்யும். இதில் உள்ள ரசாயனங்கள் வலி நிவாரணியாக செயல்படும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்த இஞ்சி சரியான உணவு ஆகும். இஞ்சியை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள, மசாலா டீயுடன் இஞ்சியை கலந்து பருகலாம். பொறியல் மற்றும் குழம்புகளில் சிறிது சிறிதாக நறுக்கிய இஞ்சியை சேர்க்கலாம். மோரில் இஞ்சி பொடியை சேர்த்து கொள்ளலாம். சூடான தண்ணீரில் இஞ்சியை சேர்த்து குடிக்கலாம்.

Tags :
|
|