Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மொபைல், டிவி எதை பார்ப்பது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ?

மொபைல், டிவி எதை பார்ப்பது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ?

By: Karunakaran Sat, 17 Oct 2020 2:11:51 PM

மொபைல், டிவி எதை பார்ப்பது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ?

பெரியவர்களே ஏதேனும் வேலையின் நடுவே குழந்தைகள் குறுக்கிட்டால் மொபைலைக் கொடுத்து படம் பார்க்கச் சொல்கிறார்கள். சிறிதுநேரம் கழித்து மொபைலை ரொம்ப நேரம் பார்த்தால் கண்களுக்கு ஆபத்து என நினைக்கிறார்கள். அதனால் உடனே போனைப் பிடிங்கி டிவியை ஆன் செய்துகொடுக்கிறார்கள். ஆக, மொபைலை விட டிவியில் கார்ட்டூன் நிகழ்ச்சிகள் பார்ப்பது பாதுகாப்பானது என நினைக்கிறார்கள்.

மொபைலைக் கண்களுக்கு மிக அருகில் வைத்துப் பார்க்கிறார்கள். அதனால் கண்கள் மிக விரைவில் சோர்ந்துவிடுகின்றன. மேலும், அக்கம் பக்கம் திரும்பக்கூட இல்லாமல் இமைக்காது மொபைலைப் பார்க்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உடல் சார்ந்த சிக்கல்களோடு மனரீதியான பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பு அதிகம். மொபைலில் இண்டர்நெட் கனெக்‌ஷன் இருப்பதால் குழந்தைகளின் வயதுக்கு மீறிய காட்சிகளைக் காணும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. மேலும், மற்றவர்களோடு சாட் பண்ணும் வசதியும் இருக்கிறது.

டிவிக்கும் குழந்தைக்குமான இடைவெளியை நாம் தீர்மானிக்க முடியும். ஆயினும் டிவி திரையின் அளவும் மொபைல் திரையின் அளவையும் ஒப்பிட்டுக்கொள்வது நல்லது. அதனால், மருத்துவர்கள் வலியுறுத்தும் விதத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் உட்கார வைத்து விடலாம். அடுத்து, இண்டர்நெட். டிவியில் கார்ட்டூன் நிகழ்ச்சிகள் பார்ப்பதால் வயதுக்கு மீறிய காட்சிகள் வருவதற்கு வாய்ப்பில்லை. இப்போது பல வீடுகளில் டிவியிலும் இணைய வசதி இருக்கிறது. அது துண்டிக்கப்பட்டிருக்கிறதா என செக் பண்ண வேண்டும். அடுத்து, டிவியில் போன் பண்ணச் சொல்லி, மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லி வரும் விளம்பரங்களைப் பார்த்து அவ்வாறு உங்கள் குழந்தை செய்கிறாரா என்பதைப் பார்ப்பது.

mobile,tv,physical health,children ,மொபைல், டிவி, உடல் ஆரோக்கியம், குழந்தைகள்

அப்படியெனில் மொபைலை விட டிவி பார்ப்பது குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது என்ற முடிவுக்கு வந்திவிடலாமா… அப்படி முழு முடிவுக்கு வந்துவிட முடியாது என்றாலும் முதல் தீமையின் அளவை விட சற்று இது குறைவு என்கிற மாதிரி ஒரு முடிவுக்கு வரலாம். டிவியில் கார்ட்டூன் சேனலில் நிகழ்ச்சிகள் பார்ப்பது, உங்கள் குழந்தையின் கற்பனை ஆற்றலை வளர்த்தெடுக்காது. இன்னும் சொல்லப்போனால் இருக்கும் கற்பனை திறனை வற்றச் செய்யும். மொபைலை ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்ப்பதுபோல, டிவியையும் பார்ப்பார்கள். அதனால் உடல்பருமன் போன்ற சிக்கல்கள் வருவதற்கான சூழல் இருக்கிறது.

நொறுக்குத் தீனி சாப்பிட்டிக்கொண்டே டிவி பார்க்கும்போது ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது குறைந்துவிடும். அதனால் உடல் ஆரோக்கியம் குறைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. முடிந்தளவு டிவி, மொபைல் நினைப்பு வராமல் விளையாடுவதற்கான பொருள்கள் வாங்கிக்கொடுங்கள். மேலும் கதை புத்தகங்கள், நல்ல பாடல்கள் கேட்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். கொரோனா பிரச்னைகள் முடிந்ததும் அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடப் பழக்க வேண்டும்.

Tags :
|
|