Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கர்ப்பிணி தாய்மார்கள் அதிகம் சாப்பிடவேண்டியவை எவை ?

கர்ப்பிணி தாய்மார்கள் அதிகம் சாப்பிடவேண்டியவை எவை ?

By: Karunakaran Fri, 28 Aug 2020 6:53:59 PM

கர்ப்பிணி தாய்மார்கள் அதிகம் சாப்பிடவேண்டியவை எவை ?

கர்ப்பிணி தாய்மார்கள் உணவு பழக்கத்தில் மேல் அதிக கவனம் செலுத்த வேண்டும். கலோரிகள் அதிகம் கொண்ட உணவை சாப்பிடவேண்டியது அவசியம் தான் என்றாலும், வயிற்றை நிரப்பி எடையை அதிகரிக்காத உணவாக அவை இருக்கவேண்டிய தேவையும் உள்ளது. இதனால், புரோட்டின் வகை உணவுகள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிக உகந்தது.

புரோட்டின் வகை உணவுகள் இலகுவாக செமிபாடு ஆகுவதுடன், உடலுக்கு தேவையான கலோரிகளையும் கொண்டு வருகின்றது. இதனால் உடல் அதிக எடையை அடையாமல் இருக்கும். இதனால் தான் கர்ப்பிணி தாய்மார்கள் 'பால்' வகை உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

pregnant mothers,eat,food,calories ,கர்ப்பிணித் தாய்மார்கள், சாப்பிடுவது, உணவு, கலோரிகள்

கர்ப்பிணி தாய்மார்கள் பழங்கள் சாப்பிட முடிவில்லை என்றால், ஒரு க்ளாஸ் பால் அருந்தி வந்தாலே போதுமானது. அவை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன் உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்கும். பொதுவாகவே கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிக பசி ஏற்படும் இதனாலேயே அதிக உணவு உட்கொள்கிறார்கள்.

கர்ப்பிணி தாய்மார்கள் நாள் ஒன்றுக்கு 350 இல் இருந்து 400 வரையான கலோரிகள் கொண்ட உணவை மேலதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவை வயிற்றை மாத்திரமே நிரப்பும் உணவாக மாத்திரம் இருக்கக்கூடாது. உடல் ஆரோக்கியம் மற்றும் குழந்தை வளர்ச்சியையும் ஏற்படுத்தக்கூடிய உணவாக இருக்க வேண்டும்.

Tags :
|
|