Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தாய்ப்பால் தரமுடியாத பெண்கள் இதை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்

தாய்ப்பால் தரமுடியாத பெண்கள் இதை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்

By: Karunakaran Wed, 16 Sept 2020 2:09:38 PM

தாய்ப்பால் தரமுடியாத பெண்கள் இதை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்

தாய்ப்பால் அருந்துவது பிறந்த குழந்தைகள் ஆரோக்கியமாக வளரப் போதிய சத்துக்களைத் தரும். தாய்ப்பாலில் மட்டுமே ஒரு குழந்தைக்குத் தொற்று நோய்கள் வராமல் தடுப்பதற்கான அத்தனை நோய் எதிர்ப்பொருள்களும் நிரம்பி உள்ளன. சுகப் பிரசவமோ அல்லது அறுவைசிகிச்சை பிரசவமோ, பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது தாய்மார்களின் மிக முக்கியமான கடமை. ஒரு சில தாய்மார்களுக்கு என்ன முயன்றாலும் தாய்ப்பால் தரமுடியாமல் போகலாம்.

அத்தகைய பெண்கள் சற்று சிரமம் பார்க்காமல் சில எளிய உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் போது அவர்களாலும் நிச்சயம் தாய்ப்பால் கொடுக்க முடியும். அவர்கள் பெருஞ்சீரகம் கொண்டு நீங்கள் தேநீர் கூடத் தயாரித்துக் குடிக்கலாம். தண்ணீரில் பெருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க விட்ட பின் அதில் தேனை விட்டுப் பருகி வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். வெந்தயம் தாய்ப்பாலின் அளவை அதிகரிக்க உதவும். சிறிது இலவங்கப்பட்டையை எடுத்துக் கொண்டு சுடு தண்ணீரில் போட்டு தேன் கலந்து பருகி வர, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

women,breastfeed,babies,food ,பெண்கள், தாய்ப்பால், குழந்தைகள், உணவு

சுக்கு மற்றும் மிளகு கலந்த கருப்பட்டியை தினம் சிறிதளவு உடைத்து உண்பதால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கத் தொடங்கும். சீரகத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதை நீங்கள் தினமும் பருகி வரத் தாய்ப்பாலின் அளவு நிச்சயம் அதிகரிக்கும். சீரகத்தைச் சுடு நீரில் போட்டுத் தேவைப்பட்டால் தேன் கலந்து தினமும் இரவில் பருகி வரத் தாய்ப்பால் அதிகரிக்கும். முருங்கைக் கீரை, காய் மற்றும் பூ இதில் ஏதாவது ஒன்றைப் பொரியலாகச் செய்து தாய்மார்கள் உட்கொள்வதால் தாய்ப்பால் சுரப்பு சிறப்பான வகையில் நிச்சயம் அதிகரிக்கும்.

பப்பாளிப் பழங்கள் பெண்கள் தினம் மிதமான அளவில் உட்கொள்வதால் பால் நன்றாகச் சுரக்கத் தொடங்கும். தினமும் நீங்கள் செய்யும் சமையலில் பூண்டைச் சற்று அதிக அளவில் பயன்படுத்தி வந்தாலே தாய்ப்பால் சுரக்கும் அளவு அதிகரிக்கும். வெற்றிலையை நெருப்பில் காட்டி, பின் மார்பில் வைத்துக் கட்ட தாய்ப்பால் நன்றாகச் சுரக்கத் தொடங்கும். இன்றளவும் இந்த வீட்டு வைத்தியம் கிரமங்களில் பெரிய அளவில் பின் பற்றப்பட்டு வருகிறது.

Tags :
|
|